பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள்



இதுகாறும் இறைவனையே வணங்கி மகிழ்ந்த மக்கள் தமது இம்மை பற்றியும் மறுமை பற்றியும் சிந்திக்கத் தொடங்குகின்றனர். 'ஆன்மா' என ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உருக்கொள்ளுகின்றது. “அரிது அரிது மானிட ராதல் அரிது. மானிடராயினும் கூன் குருடு பேடு நீங்கப் பிறத்தல் அரிது. பேடு முதலியவை நீங்கப் பிறந்த காலையும் ஞானமும் ஒழுக்கமும் வாய்த்தல் அரிது..." என்ற முறையில் மக்கள் சிந்திக்கத் தொடங்குகின்றனர். வியாக்கி யானங்களும், இராமாநுசருடைய ஸ்ரீபாஷ்யம், விஷ்ணு சகஸ்ரநாம உரைகளும் இவர்கட்குக் கைகொடுத்து உதவுகின்றன. எங்குப் பார்த்தாலும் சத்சங்கங்கள், காலட்சேப கோஷ்டிகள் முதலியவை நடைபெற்ற வண்ணம் உள்ளன. மக்கள் தத்துவ விசாரணையில் தலைகாட்டத் தொடங்குகின்றனர். பெரும்பாலும் இவை பொதுமக்களுக்குப் படிக்க எட்டாப் பழமாக இருந்தன. நம் பி.ப. அண்ணாசாமியின் எளிய முறையில் விளங்கக் கூடிய சொற்பொழிவுகளும் தொடர்ச்சியாக சுவாமி அவர்களின் தீபிகைக் கட்டுரைகளும் பருவ வெளியிடுகளில் வெளிவரத் தொடங்குகின்றன. ஞானாசிரியன்போல் நம் சுவாமிகள் தம் பேச்சாலும் எழுத்தாலும் மக்கள் மனத்தைக் கவருகின்றார்கள். பருவ வெளியீடுகளில் வெளிவந்தவை நாளடைவில் ‘திவ்வி யார்த்த தீபிகை’ என்ற பெயரில் தொகுதி தொகுதிகளாக மக்கள் கைகளுக்கு ‘எட்டும் பழம் போல்’ - ஞானக் கருவூலங்களாகக் கிடைக்கின்றன. நாமும் அப்பெருமகனார் வாழ்ந்த காலத்தில் வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தை அடைகின்றோம். பலருக்கு அப்பெருமகனாரின் தரிசனமும் ஆசியும் கிட்டுகின்றன. சுமார் இருபதாண்டுக் காலம் அவரைத் தரிசிக்க முடியாத நிலையில் அவர்தம் நூல்களில் ஆழங்கால்பட்டுப் பயனடைந்த அடியேன் அவர்தம் சதாபிஷேகம் நடைபெற்ற காலம் முதல் அவர்தம் தரிசனமும் ஆசிகளும் அடியேனுக்குக் கிட்டுவதாயின. ஏகலைவனுக்கு