பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 157 வைணவர்களிடையே நிலவும் இன்னொரு மரபும் உண்டு. தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானது பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆய மங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்று உண்டு. ஆனால், ஆழ்வார்கள் அப்படி யின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம் பெருமானாகிய புருடோத்தமனை அநுபவிக்கக் காதலிக் கின்றனர் என்பதுதான் அந்த மரபு. திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியனவாக அமைந்துள்ளன. பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள் 23; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்; மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள். இங்ங்னம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். 'சம்பந்த உபாய பயன்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜஞாவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்" (138) (பிரஜ்ஞாவஸ்தை - மூன்று காலங்களையும் அறியும் அறிவின் நிலை) என்று ஆசாரிய ஹிருதயம் கூறும். இங்ங்ணம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் பாசுரங்கட்குத் தத்துவமும் கூறுகின்றது. இந்த மூன்று நிலைகளையும் மூன்று 'பிரஜ்ஞாவஸ்தைகள் (அவஸ்தை - நிலை) என்று விளக்கமும் தருகின்றது. இந்த மூன்று நிலைகளும் 'ஞானாவஸ்தைகள்' என்னாமல் பிரஜ்ஞாவஸ்தைகள்' என்பதற்குக் காரணம் என்ன? இந்நிலைகள் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்று