பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் பராங்குச நாயகி வயது முதிர்ந்து மங்கைப் பருவம் அடைகின்றாள். கணவனை நாடி அடைய வேண்டிய வயதல்லவா இது? திருப்புலியூர் எம்பெருமானுடன் இயற்கைப் புணர்ச்சியும் நடைபெற்று விடுகின்றது. தலைவியின் உயிர்த் தோழியானவள் தலைவியின் உருவ வேறுபாட்டாலும் சொற்களின் வேறுபாட்டாலும் புணர்ச்சி நடைபெற்றமையை ஒருவாறு அறிகின்றாள். தன் மகளின் உண்மை நிலையை அறியாத தாய் தந்தையர் இவளுடைய திருமணத்தை உறுதி செய்து மனமுரசும் அறிவிக்கின்றனர். இதனை அறிந்த தோழி மனம் கவல்கின்றாள். 'பரதனே அரசன் என்று அறிவித்த முரசொலி கேட்டபோது பரதாழ்வான் எங்ங்னம் மனக்கிலேசம் அடைந்தானோ அங்ங்னமே தோழி இப்போது துயர் அடைகின்றாள். இவ்வாறு சிந்திக்கின்றாள்: 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' (நாச்.திரு.1:5) என்று கூறியவள் இவள். 'அன்றிப்பின் மற் றொருவர்க் கென்னைப் பேசுவொட்டேன் மாலிருஞ் சோலை எம்மாயற்கல்லால் (பெரியாழ்.திரு. 3.4:5) என்ற பிடிவாதத்தைப் பிடிக்கின்றவள். மாறாக ஏதேனும் நடை பெற்றால், இவள் உயிர் தரியாள். அப்படி நடைபெறுவதை எப்படியாயினும் தடுத்தேயாக வேண்டும். அங்ங்ணம் செய்ய முயலுங்கால் திருப்புலியூர் நாயனாருடன் புணர்ச்சி உண் டானமையை அறிவிப்பின் அஃது என் காவற்சோர்வாலே நிகழ்ந்தது என்று ஏற்பட்டுவிடும். அறிவியாது ஒழியில் இவள் வாழாள். இந்நிலையில் செய்யவேண்டியது என்ன? என்பதாக தோழி இங்ங்னம் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது தலைவியின் பெற்றோருக்கும் அவளுடைய வடிவ வேறுபாட்டிற்கும் காரணம் யாதாக இருக்குமோ என்று ஆராயும் நிலையைக் காண்கின்றாள். தானும் அவர்களுடன் சேர்ந்து ஆராய்வதாகக் கொண்டு இதனை விலக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றாள். இந்த முறையைக் கூறுவதாக அமைந்ததே இத்திருவாய்மொழி. இதுவே அகப்