பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 163 குறிப்பிடுகின்றாள். 'புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழும் இவளே என்பதாக. அனிமேருவின மீதுலவும் துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றி யும்பல் சுடர்களும்போல் மின்னு நீள்முடி யாரம் பல்கலன் தானுடை எம்பெருமான் (2) என்றி பாசுரப்பகுதியால் அத் திருப்பதி எம்பெருமானது திவ்விய ஆபரண அழகில் தலைவி ஈடுபட்டுப் பேசும் படிகளை விரித்துரைக்கின்றாள். "மேரு மலையின்மீது ஆயிரம் கதிர்கள் விரித்தாற் போன்று திருவபிடேகமும், விண்மீன் கூட்டங்கள் மன்னினாற் போன்ற பல மாலை வரிசைகளும் மற்றும் அணிவகைகளும் ஒளிரும் அழகை என்ன வென்று சொல்வது?" என்று வாய்வெருவி நிற்கின்றாள் என்று குறிப்பிடுகின்றாள் தோழி. இவளுக்கு அத்தலத்து எம்பெருமானோடு கலவி நேர்ந்ததாகவே நினைக்கத் தோன்றுகின்றது என்பது தோழியின் குறிப்பு. 2. தாய்ப் பாசுரங்கள் : அகப்பொருள் பாசுரங்களையுடைய திருவாய்மொழியில் தாய்ப் பாசுரங்களாக நடைபெறுபவை ஏழு பதிகங்கள்." இவை ஈசுவர பாரதந்திரியத்தையும், அவனே உபாய மாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றன." ஒரு பாசுரத்தைக் கொண்டு இதனை விளக்குவேன் 'மண்ணையிருந்து (4.4) என்ற திருவாய்மொழி தாய்ப்பேச்சாக ஆழ்வாருடைய பரம வைணவத்தை வெளியிடும் போக்கில் அமைந்துள்ளது. எம்பெருமான் 8. திருவாய் 2.4; 4.2, 4.4; 5.6; 6.6; 6.7; 7.2. 9. பாரதந்திரியம் - பரனுக்கு ஆட்பட்டிருத்தல். 10. ஆசா. ஹிகு. சூத்திரம் - 133