பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 165 திருத்தாயார் பேசுகின்றாள் (திருவாய் 4.1:4) : மண்னை யிருந்து துழாவி 'வாமனன் மண்ணிது என்னும்; விண்னைத் தொழுதவன் மேவு வைகுந்தம் என்றுகை காட்டும்; கண்ணையுள் நீர்மல்க நின்று கடல்வண்னன்' என்னும், அன்னே!என் பெண்னைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன் பெய்வளை யீரே? (1) என்பது முதற்பாசுரம். இதில் பராங்குச நாயகியின் திருத் தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்கட்கு 'இப்படி இவளை எம்பெருமான் பிச்சேற்றினான்; இதற்கு என் செய்வேன்?’ என்கின்றாள். உலகத்தில் எல்லோரும் மண்ணை மண்ணாகவே நினைப்பர், ஆழ்வார் நாயகி வேறுவிதமாக நினைக்கின்றாள். எம்பெருமானுடைய நறுமணம் மிக்க திருவடியின் சம்பந்தம் பெற்றதனால்தான் மண்ணுக்கு மணம் உண்டாயிற்று என்பது இவள் நினைப்பு. கையினுடைய செயலாலே திருநாட்டைக் காட்டியதுடன், திருநாட்டில் அவன் இருக்கிற படியைக் காணப்பெறாமையிலே கண்ணி மல்க நின்று தன் ஆற்றாமையாலே திருவடிவத்தை நினைத்துத் 'கடல் வண்ணனே! என்கின்றாள். கடல் போன்ற திருமேனியைக் காட்டியன்றோ என்னை இங்ங்ணம் வியாமோகிக்கச் செய்தது' என்று தெரிவித்தவாறு. இங்ங்ணம் என் மகளைப் பிச்சேறும்படி செய்த பெருமான் விஷயத்தில் நான் செய்யக் கூடியது யாது? அவரை இங்கு வந்து சேரும்படி செய்ய வல்லேனோ? ஒன்றும் மாட்டுகின்றிலேன்' என்பது கருத்து. இத்திருவாய்மொழியின் இன்னொரு பாசுரம் இது :