பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும், போம்இள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ. தென்னும்: ஆம்அள வொன்றும் அறியேன் அடுவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே (5) என்பது, 'இவளுக்கு இத்துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது? என்று அறிகிறேன்' என்கின்றாள். 3. மகள் பாசுரங்கள் திருவாய்மொழியில் மகள் பாவனையில் நடைபெறும் பதிகங்கள் பதினேழு'. இவற்றுள் தூதுப் பதிகங்களாக நடைபெறு பவை நான்கு.' மாசறு சோதி (5.3) : இத் திருவாய்மொழி மகள் பாசுரமாக நடைபெறுவது. மடலூர்தல் என்ற துறையின் அடிப்படையில் நடைபெறுவது. இத் திருவாய்மொழியின் அவதாரிகையில் நம்பிள்ளை அருளிச் செய்வது: "மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை (5.2:11) என்று எம்பெருமானின் வடிவழகையும் குணங்களையும் அநுசந்திக்கவே ஏறாளும் இறையோனும்'(48) என்கிற திருவாய்மொழியில் உண்டாயிருந்த காதலே மீண்டும் கிளர்ந்தெழுந்து எம்பெருமானுடன் மெய்யுறு புணர்ச்சியை விரும்பி அவனை அணைக்கக் கைநீட்ட, அவன் அகப்படாமல் கைகழிந்து நிற்க, அதனாலே ஒரு பிராட்டியின் நிலையை அடைந்து மடலூர்வேன் என்று அச்சமுறுத்திக் காரியம்கொள்ளப் பார்க்கின்றார். 11. ஆசா. ஹிரு சூத்திரம 134 12. திருவாய, 1.4: 6.1, 6.8; 9.7 என்பவை