பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 167 சக்கரவர்த்தி திருமகன் வருணனைச் சரண்புகுந்து வழிவேண்டின இடத்தும் அக்கடலரையன் இறுமாப்பையே பாராட்டி முகம் காட்டாமல் அலட்சியம் செய்து கிடக்க, பெருமான் சீறிச் சிவந்த கண்ணினராய், "இதோ இக்கடலை வற்றி அழித்து விடுகின்றேன்; இலட்சுமணா சார்ங்க வில்லைக் கொண்டு வா; வானரமுதலிகள் காலாலே நடந்து செல்லட்டும்; ஒருக் கணத்தில் இக்கடல் படுகிற பாட்டைப் பார் என்று அருளிச் செய்து கடலரையனையே அழிக்க முயன்றாப்போலே நமது விருப்பத்தை நிறை வேற்றாத எம்பெருமான் ஏதுக்கு? என்று பகவத் தத்துவத்தையே இல்லையாம்படிச் செய்துவிடப் பார்க்கிறார் என்று மடல்எடுக்கையில் புகுகின்றார் இத்திருவாய்மொழியில். "மடல் எடுக்கையாவது போர்சுட்டுப் பொரி கொறிக்கையைப் போன்றது ஒன்றாகும். மடல் எடுத்தல் என்பது, துணிவுள்ள காரியமுமாய் மிகச் சிறிய பலமுமாயிருக்கும் என்பதனைக் காட்டுகின்றார். பகவத்விஷயத்தில் ஈடுபடும்படியாய்ப் பிறரைத் திருத்துகின்ற இவரைப் பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது' என்று திருத்தப் பார்த்தால் திருந்தாயேயன்றோ? "மடலூர்தல் என்பது தமிழிலே ஒருமுறை உண்டு. நாயகனும் நாயகியும் ஊழ்வசத்தால் சந்தித்து அவர்களிடையே 'கண் கலவி உண்டாக, பின்னர் அதே ஊழ்வினையின் காரணமாகப் பிரிவோடே முடிவுற்றுப் பிரிய, இருவரும் குணாதிகர்களாககையாலே இருவருக்கும் ஆற்றமை விஞ்சி நிற்க, அவனுடன் கூடுதற்காக நாயகி செய்யும் சாகச்செயலே மடலூர்தல் என்பது. நாயகனை ஒரு படத்தில் எழுதி வைத்தகண் வாங்காமல் அதனைப் பார்த்துக்கொண்டு மலர் சந்தனம் முதலிய மணப் பொருள்களையும் நஞ்சென உதறித் தள்ளி ஊனும் உறக்கமும் நீராடலுமின்றி பனைமடலைக் கையிலே ஏந்திக் கொண்டு அதனால் உடம்பையும் குருதிவர மோதிக் கொண்டு விரித்த கூந்தலுடன் 'இந்தப் படுடாவி என்னைக் கைவிட்டான்; அவன் கண்ணோட்டமில்லாத