பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் கடியன்; அவனிலும் விஞ்சிய கொடியன் இல்லை என்று கூறிய வண்ணம் தெருவேறக் கதறிக்கொண்டு கேட்டா ரெல்லாரும் நடுங்கும்படியும் இரங்கும்படியும் திரிந்து உழல்வதைத்தான் தமிழர்கள் மடலூர்தல்' என்று திருநாமம் இட்டனர். மடலூர்தலுக்குப் பயன் : இந்தச் சாகசச் செயலைக் கண்டு அரசரும் பெரியோரும் இந்த ஆர்த்தியைப் பொறுக்க மாட்டாத கருணையினால் இருவரையும் கூட்டி வைப்பர் தோழிமாராவது கூட்டி வைப்பர்; பழிக்கு அஞ்சி நாயகனே வந்து கைபிடிப்பான்; இவையொன்றும் இல்லையாகில் நாயகி தான் முடிந்து பிழைத்துப் போவாள். இவையே பயன்கள். ஆழ்வார் இப்படி எம்பெருமானைப் பழித்துக் கொண்டு சாகசத் தோற்றத்துடன் தெருவில் கிளம்பினாளா? எனில்; இல்லை. மடலூர்வன்' என்று சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதை முற்ற முடியக் கொண்டு செலுத்தவில்லை. "தோழி! உலகு தோறலர் தூற்றிஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே" (5.3:9) என்றும், "ஆம்மடம் இன்றிதெருவு தோறயல் தையலார், நாமடங்காப் பழிதூற்றி நாடும் இரைக்கவே" (5.3:10) என்றும் கூறுவதால் இதை அறியலாம். திருமங்கையாழ்வாரும் "பெருந்தெருவே ஊரார் இகழிலும் ஊரா தொழியேன் நான், வாரார்பூம் பெண்ணை, மடல்' (சிறிய திருமடல்) என்றும், "உலகறிய ஊர்வன் நான், முன்னி முளைத்தெழுந்தோங்கி யொளி பரந்து, மன்னியூம் பெண்ணை மடல்" (பெரிய திருமடல்) என்றும் மடல் ஊர்வதாகச் சொல்லி அச்சமுறுத்துவதைக் காணலாம். இத் திருவாய்மொழியில் ஆழ்வார், நாயகி சமாதியில் நின்று தம்முடைய ஆசையின் மிகுதியைக் கூறுவதே இதன் உள்ளுறையாகும்.