பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 169 ‘எம்பெருமான் தனக்குத் திருவுள்ளமானபோது நம்மை நோக்கியருள்வன்; நாம் பதறவொண்ணாது' என்று அநுசந்தித்து ஆறியிருக்க வேண்டியதன்றோ சொரூபம்? அங்ங்ணம் இராமல் தாம் பதறி இயல்புக்கு மாறாக நடந்து, கொள்வது பெருங்குற்றமன்றோ? அதிலும் பிரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் இப்படி மடலூர்வதாகச் சொல்வது பொல்லாங்கன்றோ? என்னில், அன்று அடைய வேண்டிய பொருளின்மீது கழிபெருங்காதலினால் ஏற்படும் முயற்சி எம்பெருமானுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தினால் உண்டான முயற்சி அல்ல. மீறி நிற்கும் காதலை உடையார்க்கு இது குற்றமுமன்று. 'ஞானம் கனிந்த நலம்' என்றபடி ஞானபரிபாக ரூபமான பக்தியின் காரியமாகச் சம்பவிக்கின்ற கழிபெருங்காதலால் வரும் சிறப்பு முயற்சிகள் யாவும் மிகவும் ஆதரிக்கத் தக்கவையே. கரும மடியான அஞ்ஞானத்தினால் வருபவையே விடத்தக்கவை; கீழ்த்தரமானவை. ஆனாலும் சேதநனிடத்து ஒருவகையான முயற்சியும் சகியாத சித்தோபாயத்தின் தத்துவத்திற்கு உரிய இந்த முயற்சிக்கு இடையூறாக மாட்டாதோ என்னில், இந்த முயற்சியும் சித்தோபாயமான எம்பெருமான் பண்ணின கிருஷியின் பயன் எனக் கருதத் தக்கது. "பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன்" (5.3:4) என்று இப்படிப்பட்ட அதிப்ரவர்த்திக்குக் காரணமான பக்தியைப் பிறப்பிப்பவனும் வளரச் செய்பவனும் அவ்வெம்பெருமான்தான் என்றன்றோ சொல்லப்பட்டுள்ளது? ஆகையால் இம்முயற்சி உபாயபலன் என்பது பூருவாசாரியர்களின் சித்தாந்தம். அன்றியும் பலனைக் கடுகப்பெறவேண்டும் என்ற விரைவின் மிகுதியால் கண்ணாஞ் சுழலையிட்டு இத்தலைப்படுகின்ற அலமாப்பெல்லாம் நம்மை யாசைப்பட்டு 13. இரா. நூற்.-66