பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் இங்ங்ணம் துடிக்கப் பெறுவதோ? என்று அவன் திருமுகம் மலருகைக்கு உறுப்பாகையால் இத்தகைய முயற்சிகள் எல்லாம் அவனுடைய முகமலர்ச்சிக்காகப் பண்ணும் கைங்கரியத் தோடொத்து உபேயத்தில் கலந்து மறைந்து விடும் என்றே அறுதியிடத்தக்கது. மாசறு சோதிஎன் செய்யவாய் மணிக்குன்றத்தை ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி அறிவி ழந்துஎனை நாளையம் ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செயுமே (5.3:1) என்பது இத் திருவாய்மொழியின் முதற்பாசுரம், பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்த தோழி அதனை விலக்கப்புகுந்து ஊரார் பழிச் சொல் காண்' என்ன: 'அவனுடைய அழகு முதலியவற்றில் அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை அலட்சியம் பண்ணும் நிலையில் இலேன்' என்கின்றாள் தலைவி. "மடல் எடுக்கை மாசு என்றிருக்கின்றாள் தோழி, மடல் எடா தொழிகை மாசு என்றிருக்கின்றாள் இவள். பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கின்ற விஷயங்களைப் போன்றது ஆகுமே. வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்பட வடிவிலே மண்டுகின்றாள்" என்பது ஈடு. வெறும் வடிவழகை மட்டிலும் கண்டு துடிக்கின்றேன் அல்லேன் அகவாயில் சீலகுணத்தைக் கண்டு துடிக்கின்றேன் காண் என்கின்றாள் மாசறுசோதி என்பதனால், எம்பெருமாள் தம்மை நாடிக்கொண்டு வரவேண்டுமே யன்றி தாமாக அவனை நாடுவது சொரூப ஞானத்திற்குப் போராதே என்று சிலர் சொல்ல, 'அறிவிழந்து எனை