பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் பெருமக்கள் இந்த அகத்துறையைப் பயன்படுத்திய அருமைப் பாட்டை எடுத்துரைப்பது சொல்லுந்தரமன்று. ஆழ்வார் பெருமக்கள் தாமான தன்மையை விட்டு பிராட்டியாரின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பாசுரங்கள் அமைக்கும்போது தூதுபற்றிய பாசுரங்கள் ஏற்கும் நயப்பாடு அற்புதம். ஆழ்வார்கள் பிராட்டியின் நிலையில் பெரும்பாலும் புள்ளினங்களையே தூது போகும்படியாகப் பாசுரங்களை அமைப்பர்; குருகினங்கள், நாரைகள், அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, மயில், பூவை, அன்றில்கள், வண்டினங்கள் முதலியவை தூது விடும் பொருள்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றைத் தவிர வாடை, மேகம், நெஞ்சு முதலியவற்றையும் இவர்கள் பாசுரங்களில் தூதுப் பொருளாக அமைந்திருப்பதையும் காணலாம். இங்ங்ணம் பறவைகளைத் தூது விடுத்தற்கு உட்பொருள் உண்டு. சேர்ப்பாரைப் பட்சி களாக்கி ஜ்ஞானகர்மங்களைச் சிறகு என்று, குரு, ஸ்ப்ரமசாரி, புத்ர சிஷ்ய ஸ்தானே ஸ்தா னேபேசும் (குத்திரம் - 150) (லப்ரமசாரி - ஒரு சாலை மாணாக்கர்; ஸ்தானே - இடத்தில்) என்று ஆசாரிய ஹிருதயம் இந்த உட்பொருளை சூத்திரமிட்டு விளக்கும். "விண்ணோர் பிரானார், மாசுஇல் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே" (திருவிருத்55) என்று ஆழ்வாரே அருளிச்செய்துள்ளமையால் பகவத் விஷயத்தில் கொண்டுசேர்க்குமவர்கள் பறவைகளாகக் கொள்ளப் பெறுவர். இரண்டு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்ங்ணம் விசும்பில் பறந்து செல்லுதல் இயலுகின்றதோ அங்ங்னம் ஞானம் ஒழுக்கம் (அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப் பெறுகின்றான்