பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 காஞ்சி பி.ப, அண்ணா சுவாமிகள்


எம்பெருமான் 'நாம் கொடுத்த அறிவு அப்புடிக் கலங்கி விடாது கலங்கினாலும் மேலெழச்சிறிது கலங்குமேயல்லது உள்ளே கம்பீரமாகவே இருக்கும்' என்பன். அப்போது 'மதியெலாம் உள்கலங்கிற்று' என்று எடுத்து இயம்புங்கள். அது கேட்ட எம்பெருமான் எல்லாம் கலங்கிப் போனால் என்ன? நாம் இருக்கிறோம். பின்பு நாம் அணுகும்போது அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம் என்பன், அப்போது 'மயங்குமால்' என்று கூறுங்கள். அதாவது 'முடியும் தருணமாயிற்று' என்று விளக்குங்கள் மயங்கினாள் என்று முடித்ததாகவே சொல்லிவிட்டால், 'அப்படியா? முடிந்து போய் விட்டாளா? இனிப் போய் நாம் என்ன செய்வது' என்று சொல்லி ஒரு முழுக்கு போட்டு விட்டு நிற்பன். அப்படியின்றி 'அரைகுறையத்தலைகுறைய' ஆனைக்கு உதவ ஓடிவந்தாற்போலே கடுக ஓடி வரும்படியாகச் சிறிது பசையிருப்பதாகச் சொல்லுங்கள்' என்கின்ராயிற்று. 'பூவை என்ற பறவையிடம் பேசுகின்றாள் புராங்குச நாயகி "ஏற்கெனவே உன்னை வேண்டிக் கொண்டிருந்தும், எனக்காக நீ தூது செல்லாது அசட்டையாய் இருந்து விட்டாய். நோயெனது நுவலென்ன நுவலாதே இருந் தொழிந்தாய்" என்கின்றாள். சாயலொடு மணிமாமை

         தளர்ந்தேன்நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில்
          வைப்பாரை நாடாயே (8) 

என்று தற்கால நிலையைக் கூறுகின்றாள். சாயல் என்பது சமுதாயச்சோபை; இது வடமொழியில் இலாவண்யம்' எனப்படும். மணிமாமை என்பது அழகு. இவ்விரண்டும் நீங்கப்பெற்றேன்' என்கின்றாள். இங்ங்னம் இவள் சொல்லக் கேட்ட பூவை "இதோ விரைந்து சென்று எம்பெருமானுக்கு அறிவிக்கின்றேன்' என்று புறப்படத் தொடங்கும்போது