பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ப்பும்

7



ஆங்கில அறிவும் ஏற்பட்டது. இப்போது சுவாமியின் வயது 14. இந்த வயதில் சுவாமியின், திருத்தந்தையாரும் ஆசாரியன் திருவடிகளையடைந்தார். இதுவும் சுவாமிக்குப் பெரும் பேரிழப்பு.

நாலாயிரம் முதலியவற்றில் சுவாமியின் தாய்வழிப் பாட்டனாரும் அப்போது அழகிய மணவாளஜீயர் பீடத்தை அலங்கரித்தவருமான சஷ்டிஜீயர்சுவாமி தமிழில் தன்னிகரற்ற புலவர். திருநாராயணபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் காஞ்சிபுரம் திரும்ப நேரிட்டது. இதனால் நம் சுவாமிக்கு நல்ல வாய்ப்பு. அவரிடம் சுமார் இரண்டாண்டுகளில் நாலாயிர திவ்வியப்பிரபந்த வியாக்கியானங்கள், கம்பராமாயணம், திவ்வியகவியின் அஷ்டப் பிரபந்தம், நன்னூல் முதலானவற்றை ஆர்வத்துடன் கற்று அவற்றில் நல்ல புலமை எய்தினார்.

தங்கக்காப்பு அணிதல் : ஒரு சமயம் மைசூர் பண்டித ரத்னம் கஸ்துரி அரங்காசாரிய சுவாமி காஞ்சிக்கு எழுந்தருளியபோது சடகோப நிலையத்தில் ஒரு தேர்வு நடத்தினார். அங்குக் கீழ் வகுப்பில் அமர்ந்திருந்த சுவாமி மேல் வகுப்பு மாணவன் ஒருவனால் விடையளிக்க முடியாத வினாவுக்கு விடையளித்தார். அதனால் மெச்சின பண்டித ரத்னம் சுவாமி நம் சுவாமிக்கு இரண்டு சவரன் டாலர் பரிசாக அளித்தார். ஏனையோர்க்கெல்லாம் அவரவர் தகுதிகட்கேற்ப ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் வீதம் பரிசளிக்கப்பெற்றன. சுவாமியின் பெற்றோர் அதனைக் கொண்டு தங்கக் காப்பு செய்து தம் மகனுக்கு அணிவித்தார்கள். சுவாமி அவற்றைத் தம் 26, 27 அகவை வரை அணிந்து கொண்டிருந்தார். அதனால் நம் சுவாமி ‘தங்கக் காப்பு அண்ணா’ என்று வழங்கப் பெற்றார்.

இளமையில் பெற்ற பரிசுகள் : நம் சுவாமி 12 அகவையில் சமஸ்கிருதத்தில் சுலோகங்கள் கட்டுரைகள்