பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும்

13



இசைவு அருளினார். வேண்டுகோள் விடுத்த மறுநாளே காஞ்சிக்கு எழுந்தருளினார். அவர் தங்கியிருக்க வேண்டிய வசதிகள் செய்யப் பெற்றன. ஒரு நல்ல நாளில் அழகிய மணவாள ஜீயர் மடத்தில் அத்யயனம் தொடங்கப் பெற்றது. அப்போது நம் சுவாமியின் அகவை 22. ஆறு ஆண்டுகளில் பல்லோர் வியக்கும் வண்ணம் அத்யயனம் நிறைவு பெற்றது.


ஜீயர் சுவாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது பின்மாலை4 வேளைகளில் மடத்தில் அத்தியயனம் ஓதுவது வசதியற்றதாகி விட்டது. எனவே சில நாட்கள் வெவ்வேறு இல்லங்களில் வேதாத்யயனம் நடைபெற வேண்டியதாயிற்று. இதிலும் பற்பல வசதிக்குறைவுகள் ஏற்பட்டபடியால் வேதாத்யயனத்திற்கென்று சொந்தமாக ஒரு கட்டடம் வாங்கத் தீர்மானித்தார் நம் சுவாமி. காஞ்சி அத்திகிரி பெருமாள் கோயில் கீழண்டை மாட வீதியில் இரண்டு திருமாளிகைகளை விலைக்கு வாங்கினார். அவற்றுள் ஒன்றை பாடசாலையாகவும், மற்றொன்றை உணவு விடுதியாகவும் நிர்மாணம் செய்வித்தார் நம் சுவாமி. இது (1916-18) இல் நடைபெற்றது. 1964 முதல் நம் சுவாமி வாழ்ந்து வந்தது இவ்விரண்டு திருமாளிககளுள் ஒன்றிலேயேயாகும்.

திருவீதி வலம் : ஒரு சமயம் இவருக்கு வேதாத்யயனம் கற்பித்த மாம்பள்ளம் சுவாமி நாடோறும் வீதிவலம் வரும் கைங்கரியம்5 செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். அப்படிச் செய்யும் போது அத்யயன காலங்களில் வேதபாராயணமும் அனத்யயன காலங்களில் தோத்திர

 

4. பின்மாலை - விடியற்காலை. இது வைணவர்களின் பேச்சு வழக்கு.

5. கைங்கர்யம் - அடிமைத் தொழில், கிங்கரன் வேலையாள். கிங்கரன் செய்யும் செயல் கைங்கரியம்