பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 21 சுவாமியை நேரில் கண்டதில்லை. படிக்கும்போது அறிவும் அநுபவமும் குறைவுள்ளவனாதலால் நிறைந்த ஐயங்கள். ஐயம் ஏற்படும் போதெல்லாம் கடிதம் எழுதுவேன். சுவாமியிடமிருந்து மறுநாளே ஐயத்தைப் போக்கிக் கடிதம் வரும். தெளிவு பிறக்கும்; மேலும் படிப்பை தொடர்வேன். இங்ங்ணம் தீபிகையைப் படித்து ஓரளவு தெளிவு பெற்றேன். ஆய்வு முடிந்து டாக்டர் பட்டமும் பெற்றேன். இதுகாறும் சுவாமியைப் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற துடிப்பு மட்டிலும் இருந்து கொண்டுதான் இருந்தது. கல்லூரிவேலைப் பளுவும் எழுத்துப்பணியும் இருந்து கொண்டே இருந்தமையால் எங்கும் நகர முடியவில்லை. ஆயினும் 1960 முதல் சுவாமியின் திவ்வியார்த்த தீபிகை எனக்குத் திருமறைகளாக உதவின என்ற உணர்வு மட்டிலும் ஆழ் மனத்தில் இருந்து கொண்டே இருந்தது. ஏகலைவனுக்குத் துரோணர் மானசீகக் குருவாக நின்று அருளியது போல, அண்ணாசுவாமியும் எனக்கு மானசீக ஆசாரியன் ஆனார். தூலமாக அடியேனைப் பார்த்து அறியாத அப் பெருமகனார் நூற்றுக்கணக்கான கடிதங்கள் மூலமாக தீபிகையை ஆழ்ந்து நோக்கிக் கற்கும்போது நேர்ந்த ஐயங்களைப் போக்கின நிலையும் அடியேனைத் தம்முடைய சீடராகக் கருதின நிலையும் என் ஆழ்மனத்தில் இருந்து கொண்டே இருந்தன. அடியேனுக்கு வரும் நல்லன தீயன அனைத்தும் என் நுகர்வினையாலும் ஏழுமலையப்பன் திருவருளாலும் வந்தன என்று கருதுபவன். இந்நிலையில் நேரில் திவ்விய தேசங்களைக் கண்டு அநுபவத்தையும் நாலாயிரத்தில் ஆழங்கால் பட்ட அறிவையும் கொண்டு எழுதப் பெற்ற "மலைநாட்டுத் திருப்பதிகள் (1971) என்ற முதல் நூல் நீதியரசர் எஸ். மகராசன் அவர்கள் அணிந்துரையுடன் வெளி வந்தது. அதனை அண்ணாசாமிக்கு,