பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 25 (5) வைணவர்கட்கே உரிய திருத்திப் பணி கொள்ளும் பண்பு நிறைந்த பெரியார். வரும் கடிதங்களில் குறையிருப்பினும் அதனை நாகரிகமாகச் சுட்டிக் காட்டும் பெருங்குணம் உடையவர். ஒரு முறை சப்தகிரி என்ற திருமலை- திருப்பதி தேவஸ்தானப் பத்திரிகை இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையொன்றில் ஒரு மகள் தன்னையுடையேன், அவளைத் திருமால் கொண்டு போனார் என்ற பெரியாழ்வார் கருத்து ஆண்டாளைக் குறிப்பதாக எழுதிவிட்டேன். அதனைப் பார்க்க நேரிட்ட சுவாமியிடமிருந்து இராமபாணம்போல் ஒரு கடிதம் வந்தது. "தாங்கள் எழுதியது பெருந்தவறு. அது தாய்ப் பாசுரமாக நடைபெறும் இடத்தில் வருவது. உடனே தவறுக்கு வருந்தி பிழைத்திருத்தம் என்று குறிப்பிட்டு எழுதுங்கள். தாங்கள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருப்பதால் பிறர் அதனைப் பின்பற்றுவார்கள். போலி நாணயம்போல் அது பரவும். தவிர்த்திடுக" என்று குறிப்பிட்ட பாங்கு அடியேனை வியக்க வைத்தது. திரு M.A. வேங்கட கிருஷ்ணன் (திருவல்லிக்கேணி) திருவரதராசன் (திருப்பதி) இவர்களையும் இவ்வாறு திருத்திப் பணிகொண்டதையும் அறிந்து வியந்தேன். இளைஞர்களாயின் கடிதங்களில் காணும் இலக்கண பிழைகளையும் தவறான மரபுத் தொடர்கள் ஆட்சியையும் சுட்டிக் காட்டத் தயங்கார். (6) பரந்த நோக்கமும் உருகும் உள்ளத்தையும் கொண்டவர் சுவாமி. தாம் சொற்பொழிவு செய்யும்போது பேச்சில் சதுரர் என்பதாக யாராவது வந்திருந்தால் அவருக்கும் சில மணித் துளிகள் பேச வாய்ப்பு அளித்து மகிழ்வார். சுவாமியின் திருப்பாவை சொற்பொழிவுகட்குத் தவறாமல் வருகை புரிபவர்கள் இதனை நன்கு அறிவார்கள். இராமாநுசரிடம் இருந்த இப்பண்பு எப்படியோ நம் சுவாமியைத் தொற்றிக் கொண்டது. சொற்பொழிவு அமர்ந்து செய்யும்போது பல மணி நேரம் ஆயினும் கால்கள் ஆடாமல்