பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் அடியார்கள் சுவாமியை சேவித்து விட்டே தம் ஊர் திரும்புவார்கள். காஞ்சியில் அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது சுவாமியின் திருமாளிகையேயாகும் திருவிழா அன்று சுவாமி அருளிச்செயல் குழுவின் தலைவராய் எழுந்தருளியிருப்பார். பின்மாலை (அதிகாலை) நான்கு மணிக்கெல்லாம் பெருமாள் புறப்பாடு நடைபெறும். அதற்கு முன்பதாகவே சுவாமிகள் கண்விழித்துத் துயில் நீங்கி தீர்த்தமாடி பன்னிரு திருமண் காப்பும் பட்டுப் பீதாம்பரங்களும் திருமணித் தாவடங்களும் திருமேனியை அணி செய்ய குழுவிற்கு எழுந்தருள்வார். குழுவில் பங்கு கொள்பவர்கட்குத் தமது திருக்கைகளால் சம்பாவனை செய்து ஈத்துவக்கும் இன்பத்தைக் காண்டார். பின்னதில் சுவாமி அவதரித்த விசாகமும் ஒன்று படுகின்றது. அப்பொழுது சுவாமியின் திருமாளிகையில் விழா நடைபெறும். காலை, மாலை இருவேளைகளிலும் திவ்வியப்பிரபந்தக் குழு சேவை நடைபெறும். ஏறக்குறைய 100 அடியார்கள் இதில் பங்கு பெறுவார்கள். அத்துணை பேருக்கும் சுவாமி சம்பாவணை செய்து மகிழ்வார். சுவாமி யின் மணிவிழா முதலாகத் தொடங்கி 34 ஆண்டுகளாக இந்த ஏற்பாடு இடைவிடாமல் நடைபெற்று வந்தது. சுவாமியின் பிறந்த நாள் விழா என்பது திவ்வியப் பிரபந்த வேதபாராயணம், ரீவைணவ ஆராதனம் ஆகிய இரண்டை மட்டிலும் அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. சுவாமியின் வாழ்நாளில் இரண்டு இறுதி நிகழ்ச்சிகள்: (சென்னையில்) (அ) இறுதிச்சொற்பொழிவு : சொற்பொழிவு நிகழ்த்தி அடியார்களை வாழ்விப்பதையே தம் கடமையாகக் கொண்டவர்கள் நம் சுவாமி. தமது திருமேனி மிகவும் தளர்ச்சியடைந்தபோதிலும் 1982-83 மார்கழித் திங்கள்