பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 29 திருப்பாவை சொற்பொழிவிற்கு எழுந்தருளினார். தமது ஆற்றலின்மையையும் பொருட்படுத்தாமல் நாடோறும் ஒருமணி நேரத்திற்குக் குறையாமல் சொற்பொழிவு நடை பெறும். "இங்குக் கேட்கும் பொருளை நீங்கள் வேறெங்கும் கேட்க முடியாது; அடுத்த ஆண்டு கேட்கவே முடியாது" என்று அருளிச் செய்தார். அப்படியே ஆகிவிட்டது. மார்கழித் திங்களிலேயே ஓரிரண்டு நாட்கள் உடல் நலக்குறைவு நேரிட்டும், விடாமல் திருப்பாவை சாற்று முறையை நிறைவு செய்து விட்டுக் காஞ்சிபுரம் திரும்பினார். (ஆ) இறுதி நூல் வெளியீடு : தாம் வெளியிடும் நூல் ஒவ்வொன்றும் சொற்பொழிவாளர்கட்குப் பேருதவியாக இருக்க வேண்டும் என்று கருதுபவர் சுவாமி. அதற்கேற்ப சுவாமி இறுதியாக வெளியிட்ட நூல் "நகைச்சுவைக் கதைகளும் பக்திக் கதைகளும்" என்பது, சொற்பொழிவுகட் கிடையே சொல்லக்கூடிய 40 கதைகள் அடங்கிய இந்நூல் 1983 மே மாதம் வெளியிடப் பெற்றது. சுவாமி பெற்றுள்ள விருதுகளும் பிறவும்: பன்னிரண்டாம் அகவைமுதல் சுவாமி பற்பல பட்டையங்களும் விருதுகளும் பெற்றுத் திகழ்ந்தார். அவை யாவும் சுவாமியை அடைந்தமையால் பெருமை பெற்றன என்று கொள்ளலே பொருத்தம். (1) உபய வேதாந்தாசார்யர் : வைணவனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இப்பட்டத்தைப் பெறுவது இயல்பாக அமைகின்றது. உண்மையாக இது பெரும் பாலோருக்குப் பொருந்துவதில்லை. ஆனால் நம் சுவாமி உண்மையிலேயே திவ்வியப்பிரபந்தம், வேதம் ஆகிய இரண்டிலும் கரைகண்டவராதலால் இப்பட்டம் அவருக்கு நூறு விழுக்காடு பொருந்துகின்றது. இதில் சுவாமி தமக்குவமராகின்றார்.