பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 31 (6) வியாக்கியான வாசஸ்பதி : ஆழ்வார் ஆசாரியர்களின் அருளிச் செயல்களுக்கு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் (தெலுங்கு, இந்தி, வடமொழி) அற்புதமான வியாக்கியானங்களைப் படைத்தவராதலால், சிவானந்த சரசுவதி என்பார் இப்படைப்புகளைப் பாராட்டி வழங்கிய விருது இது. (7) மஹாமஹிமோத்யாயர் : வடநாட்டில் பிரயாகை யிலுள்ள 'பாரதி பரிஷத்' என்ற வித்வ சபையின் சார்பில் இந்தியத் துணை ஜனாதிபதி ரீபாதக் என்பவர் கையால் 1971 இல் சுவாமிக்கு வழங்கப்பெற்ற பட்டையம் இது. (8) ஜகதாசாரிய சிம்ஹாசனாதிபதி : நம் சுவாமியின் ஆசாரியரான காதி சுவாமி ஜகத் குரு எனப்பட்டார். எனவே முதல் சீடரான நம் சுவாமியை ஜகதாசார்ய சிம்ஹாசனாதிபதி என்று ஆசாரியர் வழங்குவது சாலப் பொருந்தும். எம் பெருமானால் நியமித்த 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரது வழித் தோன்றலுமாய் பூரீவைணவ ஜகதாசார்யருமாய்த் திகழ்வதால் இப்பெயர் பட்டம்போல் அமைந்து விட்டது போலும். (9) வேத பாரங்கதர் : 22 அகவையிலேயே வேதம் ஓத முற்பட்டு, அதனைக் கசடறக் கற்று, வேத பாஷ்யங்களை ஆராய்ந்து, வேத லட்சண நூல்களையும் இயற்றி பல திவ்விய தேசங்களில் வேதபாராயண கைங்கரியத்திலும் அந்வயித்து தம் வாழ்நாள் முழுவதும் வேதமணம் கமழத் திகழ்ந்தவர் நம் சுவாமி. இவர்தம் சொற் பொழிவுகளில் வேதங்களிலிருந்து எடுக்கப்பெற்ற மேற் கோள்கள் துள்ளி விளையாடும். இந்த விளையாட்டில் அவை இஃது இத்தனையாவது காண்டத்தில் இத்தனாவது பிரசனத்திலுள்ள இத்தனையாவது பஞ்சாதி என்று தம்மை அறிவித்துக் கொள்ளும். இத்தகைய நினைவாற்றலைப் பெற்றிருந்தவர் நம் சுவாமி. இந்த விருது ரிஷிகேசம் சிவான ந்தசரசுவதி அவர்களால் சுவாமிக்கு வழங்கப் பெற்றது.