பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 37 நிரந்தர வாசமாக எழுந்தருளியிருந்த அன்று தம்மைத் தம் திருமாளிகைக்கு இட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அங்ங்னமே சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் திருமாளிகைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கே படுக்கை விரித்து சிலமிடறுகள் தீர்த்தம் பருகி விட்டு சயனித்ததுதான் தாமதம். பார்த்திருந்தவர் கண்கள் அனைத்திலும் நீர் குளமாக ஆசாரியன் திருவடி அடைந்து விட்டார். 93 ஆண்டுக் காலம் இப்பூவுலகில் நடமாடி, சுமார் 80 ஆண்டுக்காலம் வைணவ உலகில் ஒளிர்ந்த ஞானச் சுடர் அணைந்து விட்டது. நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் உலகு (337)" என்பது தமிழ்மறை மொழி அல்லவா? இறுதி நிமிடம் வரை சுவாமிக்கு நினைவு மாறவே இல்லை. அந்த நிமிடத்திலும் தேவப் பெருமாள் புறப்பாட்டிற்கு எழுந்தருள வேண்டுமே என்ற துடிப்பு இருந்து கொண்டே இருந்தது. பெரியாழ்வார் பாதத் துவத்தைக் கண்ட ஆனி தன்னில் சோதி நன்னாளிலே பர தத்துவத்திடமே சென்று சேர்ந்து விட்டார். காலம் நடையாடும் பூவுலக வாசத்தைத் துறந்து காலம் நடையாடாத, வைகுண்ட வாசியாகி விட்டார் சுவாமி. சூழ்ந்தகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ! குழ்ந்துஅத னில்பெரிய பரமன் மலர்ச்சோ தீயோ! குழ்ந்துஅத னில்பெரிய சுடர்ஞான இன்ப மேயோ! குழ்ந்துஅத னில்பெரிய என்அவா அறச் சூழ்ந்தாயே!” 4. திருக்குறள் - நிலையாமை - 7 5. திருவாய் 10.10:10