பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் இப்பாசுரம் ஆழ்வாரின் காதல் எம்பெருமானுடைய மிகப் பெரிய காதலில் மூழ்கி விட்டதை அறுதியிடுகின்றது. மூன்று தத்துவங்களையும் (சித்து, அசித்து, ஈசுவரன்) விளாக்குலை கொண்டிருக்கும் தம் அவாவானது சிறிதாம் படி, அதாவது தம்முடைய காதல் குளத்தின் அளவு என்னும்படி, கடல் போன்ற காதலோடே எம்பெருமான் வந்து கலந்தான் என்பதைத் தெரிவிக்கின்றது. இது நம் சுவாமியுடன் எம்பெருமான் வந்து கலந்தானோ என்று அடியேனின் மனம் எண்ணி மகிழ்கின்றது. தெய்விகத் திட்டத்தை யாரால் அறுதியிட முடியும்? மனிதமனங்கள் அவரவர் பக்குவங்களுக்கேற்பப் பலவாறு எண்ணும் என்ற பாங்கைக் கருதி மகிழ்கிறோம். உத்தராயணத்திலே சுக்கில பட்சத்திலே, ஏகாதசியன்று மாலை 4.30 மணிக்கு, தம்முடைய ஜன்ம நட்சத்திரமாகிய விசாகம் வந்த பிறகு திருநாடு அலங்கரித்தது வியப்பான சிறப்பர்கும். இப்படியெல்லாம் நம்மனம் எண்ணுகின்றது. அன்றிரவே இச்செய்தி காட்டுத்தீ போல் நாடெங்கும் பரவி விடுகின்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இச்செய்தி அறிவிக்கப்பெற்றமையால் அவற்றின் மூலம் இந்த நிலை ஏற்பட்டு செய்தி பரவுகின்றது. வைணவ உலகமே குமுறுகின்றது. சுவாமியை அறிந்த அனைவரும் - சமயம் கடந்த நிலையில் - கண்ணி விட்டு அழுத நிலையில் காணப்பெறுகின்றனர். மறுநாள் காலை அனைத்து நாளேடுகளிலும் முக்கிய செய்தியாக வெளிவருகிறது. பக்தர்களும் பாகவதர்களும் திடுக்குற்று அதிர்ச்சியடைகின்றனர். சுவாமியின் திருமேனியைச் சேவிக்க நெடுந்தொலைவிலிருந்து மலர்மாலைகளுடனும் மலர்வளையங்களுடன் வந்து திரளுகின்றனர். சுமார் ஆயிரம் வைணவர்கட்கு மேல் திரண்டிருப்பர்.