பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் நம்மாழ்வார் மணவாளமாமுனிகள் ஆகியோரது திருப்பரிவட்டமும் பூமாலைகளும் வெகுமானமாயின திருமலை, திருப்பதி, வேளுக்கை, திருவெஃகா, திருவல்லிக்கேணி ரீபெரும் புதுர், கூரம், மற்றும் சென்னையிலுள்ள சில கோயில் களிலிருந்தும் சிறப்பான வெகுமானங்களும் சுவாமிக்கு வந்து சேர்ந்தன. பின்னர் மாலை 3.00 மணி அளவில் சுவாமியின் சரமத் திருமேனியைத் திருத்தேரில் எழுந்தருளச் செய்து பின்குழுவாக ஆளவந்தார் தோத்திர அநுசந்தானத்துடன் சரமத்திருமேனி பயணப் புறப்பாடு நடைபெற்றது. சுவாமியை வேகவதி ஆற்றங்கரை மீது தேவப்பெருமாள் புண்ணிய கோடி விமானச் சாயையில் அமைந்துள்ள இடத்திற்கு எழுந்தருளச் செய்தனர். அங்கே பிரம்ம மேத சம்ஸ்காரம் என்னும் மிகப் பெரிய பிரக்கிரியையுடன் சுவாமியின் சரமத் திருமேனிக்கு உத்தமமான சம்ஸ்காரம் நடத்தப் பெற்று சுவாமியும் தமது பூதவுடலை விட்டு தெளி விசும்பு திருநாட்டிற்குப் பேரொளியாய் எழுந்தருளினார். சுவாமியின் திருமேனி இந்த இருள்தருமா ஞாலத்தினை விட்டு நீங்கி விட்டதே தவிர, சுவாமியால் அருளிச் செய்யப்பெற்ற ஆயிரக்கணக்கான இலக்கிய - சமய - தத்துவப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும். நான்உன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணனே நீஎன்னை யன்றி இலை." தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள்; நீடிய உலகுஎலாம் அளந்து நீண்டதாள், ஒடிய சகடுஇற உதைத்து பாம்பின்மேல் ஆடியும் சிவந்ததாள் என்னை ஆண்டதாள். -வில்லிபுத்துராழ்வார் 6. நான் திருவங்-7