பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள்

  • * * * * * * - - - - - - - - - - - to * * - - - -

நமது சுவாமி சத்சம்பிரதாயத்துக்கும் தகர்க்க முடியாத தொரு கோட்டையாக விளங்கினார் என்றால் அது மிகை இல்லை. நம் சுவாமி சம்பிரதாயப் பாதுகாவலராக விளங்கி வந்தார். பூர்வாசாரிய, கிரந்தங்களை மறுபதிப்பு செய்தும் அவற்றினுள்ள அரும் பெருங் கருத்துகளை எளிய நடையில் தெளிவாக யாவரும் அறியும்படி எழுதி வெளியிட்டும் மகோபகாரம் பண்ணியவர் நம் சுவாமி. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S சுவாமியை நாம் இழந்து விட்டது ஈடு செய்ய முடியாத நட்டமாயினும் அவர் புகழுடம்புடன் நம்மிடையே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். (ஆ) பருவ சஞ்சிகையில் வெளிவந்த கருத்துகள் : (1) பூரீ வைஷ்ணவ சுதர்சனம் : பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் அவர் ஒருவரே. மணவாள மாமுனிகளிடம் அவருக்குள்ள பக்தி அபரிமிதமானது. (2) யதிராஜ பாதுகா : மேருமலை சரிந்து விட்டது. ஒரு மாபெரும் வைணவ ஜோதி மறைந்து விட்டது. ஆயினும் அந்த ஜோதி பரப்பிய ஒளி இருந்துகொண்டே இருக்கும்.... காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங் கராசார்ய சுவாமி இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை.... 1276 என்று கணக்கிடப் பெற்றுள்ள நூல்களின் மூலமும் எண்ணற்ற தம் பிவசனங்கள் மூலமும் அந்த அறிவொளியை நாமெல்லாம் அநுபவிக்கும்படி வாரி வழங்கிக் கொண்டிருந்தார். மணியோசையை யொத்த அந்தக் குரல் ஒடுங்கி விட்டதை நினைக்க நெஞ்சம் அதிர்கிறது.