பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் ஒருவர். நடமாடும் ஒரு நூல் நிலையமாகத் திகழ்ந்தவர். வைணவ சித்தாந்தத்திலும் இலக்கியத்திலும் கரை கண்ட மேதை. பன்மொழி விற்பன்னர், நூலாசிரியர், இதழாசிரியர். சிம்மமெனக் கர்ஜிக்கும் குரல் வளம் நிறைந்த சொற் பொழிவுத் திலகம். இவர் ஒரு மேதை. இவர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. (7) கல்கி : 94-வயதில் பழுத்த பழமான வைகுண்ட பதவியை அடைந்த அண்ணங்கராசார்ய சுவாமி பிரதிவாதி பயங்கரம் என்ற வமிசத்தில் உதித்தவர். வேத, சாத்திர, புராண, பக்தி, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். இவற்றைப் பொறுத்த மட்டிலும் இவர் நடமாடும் கலைக் களஞ்சியம். 18 மொழிகளை அறிந்தவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எழுதிய 'திவ்வியார்த்த தீபிகை என்ற உரை மிகு புகழ் வாய்ந்தது. 'இராமாநுஜன் என்ற இதழின் ஆசிரியர். (8) குமுதம் : அண்ணாங்கராசார்ய சுவாமி அவர்களை மிஞ்சிய வேத விற்பன்னர் இலர். அவர் ஒரு சமுத்திரம். (9) இதயம் பேசுகிறது : தமிழகத்தில் அதிக நூல்கள் எழுதிய மாமேதை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய சுவாமிகள். எழுதிய நூல்களின் தொகை 1276, (10) முத்தாரம் : பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி பதினெட்டு மொழிகளைக் கற்றறிந்தவர். இவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 1276. அவற்றுள் திவ்வியார்த்த தீபிகை மிகு புகழ் வாய்ந்தது. 50 ஆண்டுகட்கு மேலாக 'இராமாநுசன் என்ற வைணவ இதழின் ஆசிரியராகத் திகழ்ந்தவர்.