பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 47 (11) ஜூனியர் விகடன் : உபய வேதாந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமி தமது 93-வது வயதில் அமரராகி விட்டார். ஒரு வைணவச் சுடர் மறைந்து விட்டது. இது சமய உலகிற்குப் பேரிழப்பு. (12) ஞானபூமி : கிறித்தவர்கள் விவிலியத்தையும் இஸ்லாமியர்கள் குர்ஆனையும் தம் சமய நூலாக வைத்துக் கொள்வதைப் போல் இந்துக்கள் பகவத் கீதையைத் தம் சமய நூலாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார் பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி என்ற மகான். வடகலை, தென்கலை கலைகளைச் சேர்ந்தவர்கள் துவேஷமில்லாமல் வாழ்ந்தால் போதும் என்பது அவர்தம் கருத்து: (13) திரு. இ.வ. கிருஷ்ணன், உரிமையாளர் குரு அச்சகம் : 1970-ஆம் அண்டு என்று நினைவு.... பதினைந்து வயதுள்ள சிறுவன் பட்டை திருமண் தீட்டிய முகப் பொலிவுடன் என்னிடம் வந்து என்னை காஞ்சியில் ஒரு பெரியவரிடம் இட்டுச் சென்றான். அவர் சுமார் 75 அல்லது 80 வயது நிரம்பியவர். அமர்ந்த வண்ணம் புரூப்களைத் திருத்திக் கொண்டிருந்தார். "உன் பெயர் கிருஷ்ணன் என்கின்றாய், கிருஷ்ணன் ஏமாற்றுக்காரனாயிற்றே! உன்னை நம்பலாமா?” என்றார் சிரித்துக்கொண்டே பிறகு ஒரு புத்தகத்தை எடுத்து இதை மறுபதிப்பு செய்ய வேண்டும். இன்றே வேலையைத் தொடங்கி விடு. நாளை “புரூப் அனுப்பு. இதை அட்வான்சாக வைத்துக் கொள் என்று கூறி ரூ.500/- க்கு ஒரு செக் கொடுத்தார். நான் திகைத்துப் போனேன். பெரியவரிடம் இது பற்றிக் கேட்டேன். பெரியவர் சொன்னார். "உன் முகத்தைப் பார்த்தாலே நீ யோக்கியன்