பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் என்று தெரிகிறது. மேலும் இவனைச் சிறுவன் என்று நினைக்காதே. இவன் சிபாரிசு செய்தால் நிச்சயம் அவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்று எனக்கு நம்பிக்கை யுண்டு" என்றார். அந்தப் பெரியவர்தான் மகாவித்வான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரி சுவாமி. அந்தச் சிறுவன்தான் கீதாசாரியன் ஆசிரியர் திரு வேங்கடகிருஷ்ணன். இவ்விருவருடைய சேர்க்கையால் என் வாழ்விலும் அச்சகத்திலும் ஒரு திருப்பமே ஏற்பட்டது. சுவாமியின் திருவுருவப் படத்தை மூவண்ணங்களில் அச்சிட்டுப் பார்க்க முயன்றேன். வியக்கத் தக்க வகையில் அப்படம் மிக அழகாக அமைந்தது. அன்று முதல் இன்று வரை பல படங்களை அழகாக அச்சிட்டு வரும் எனக்கு இவ்விஷயத்தில் முதன் முதல் அருள் புரிந்தவர் சுவாமிதானே! அப்படிப்பட்ட ஒரு பெரியவரை இழந்து விட்டோம் என்று நினைக்கும்போது துக்கம் நெஞ்சை அடைக்கின்றது". (14) கீதாசார்யன் : பெருமாள் கோயில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் ஜூன் 21, 1983 அன்று தமது 93-வது வயதில் திருநாடு அலங்கரித்து விட்டார். இந்த ஈடு செய்ய முடியாத பேரிழிப்பு பூரீ வைணவ சமுதாயத்தின் மேல் இடிபோல் இறங்கியுள்ளது. ஒரு ஞானச் சுடர்விளக்கு அணைந்தது. இனிமேல் அவரது வெண்கலக் குரலைக் கேட்க முடியாது. இனி அந்தத் திருக்கைகள் எழுதப் போவதில்லை. இனி சுவாமி கோஷ்டியில் சேவிக்க முடியாது. தேவப் பெருமாளை விட தேவப் பெருமாள் அருளிச் செயல் கோஷ்டியில் அதிக ஈடுபாடுடையவர் சுவாமி.