பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (12) வடமொழி நூல் திரள் : தமிழ் மொழியில் எழுதியவை போலவே வடமொழியிலும் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் நம் சுவாமி. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு சமஸ்கிருதத்தில் சுவாமி இயற்றிய வியாக்கியானம் மிக மிக அற்புதமானது என்று அறிஞர்களால் கொண்டாடப் பெறுகின்றது. முமுட்சுப்படி', 'தத்துவத் திரயம் பூரீ வசன பூஷணம் இவற்றை சமஸ்கிருத சுலோ சுரூபமாக இரகசிய ரத்னமாலிகா என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். மணவாள மாமுனிகள் விஷயமாக 600 சுலோகங்கள் பூரீசைலேச பாதுகா சகஸ்ரம் முதலியன ஆச்சரியமான தோத்திரங்களாகும். (13) இந்தி மொழி நூல்கள் : பெரும்பாலும் சுவாமியின் கட்டுரைகளை இந்தியிலும் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன. சுவாமியின் பெரிய மாப்பிள்ளையான TA. அக்காரக்கனி சம்பத் குமாரசாரியார் சுவாமி இம்மொழி பெயர்ப்புகள் பலவற்றில் பெரிதும் துணை புரிந்து வந்தார். (14) தெலுங்கு மொழி நூல்கள் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்த மூலத்தை முதன் முதலாகத் தெலுங்கு எழுத்தில் பதிப்பித்தவரே நம் சுவாமி தான். பெரும்பாலும் சுவாமியின் வியாக்கியானங்கள் அனைத்தும் தெலுங்கிலும் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. (15) பூர்வாசார்ய கிரந்த வெளியீடுகள் : பூர்வாசாரியங்கள் அருளியுள்ள கிரந்தங்களை எல்லாம் பிழையின்றி அச்சிடும் பெரும்பணியில் ஈடுபட்டு "பகவத் ராமாநுஜ கிரந்த மாலா", "வேதாந்த தேசிக கிரந்த மாலா", "வரவர மூநீந்தர கிரந்த மாலா" முதலான பல நூல்களை வெளியிட்டுள்ளார் நம் சுவாமி. பகவத் விஷயம் ஈடு முப்பத்தாறாயிரம் ஒரு முறையும், 'ஒன்பதினாயிரப்படி', 'இருபத்து நாலாயிரப்படி, ஈடு என்ற மூன்று வியாக்கியனங்களையும் சேகரித்து ஒரு முறையும் வெளியிட்டுள்ளார். ரீ விஷ்ணு புராணத்தை