பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தோவியங்கள் 55 விஷ்ணு சித்திய வியாக்கியானத்தோடும், பூரீ விஷ்ணு சகஸ்ர நாமத்தை பராசர பட்டர் வியாக்கியானத்தோடும் வெளியிட்டுள்ளார். வேதாந்த தேசிகருடைய கிரந்தங் களனைத்தையும் நன்கு பரிசோதித்து பத்தே மாதங்களில் (ஆறு தொகுதிகளாக) வெளியிட்டது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அற்புதச் செயலாகும். (16) வாதவிவாத நூல்கள் : சுவாமியை ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்றும், நடமாடும் பல்கலைக் கழகம் என்றும் மெய்ப்பிப்பவை இந்தத் தலைப்பிலுள்ள நூல்கள். ஆயிரக்கணக்கான வித்துவான்கள் கூடி நூற்றாண்டுகளில் நிறைவேற்றக் கூடியவற்றை சுவாமி ஒருவரே தனியாக நின்று ஒரேர் உழவன் போல் நிறை வேற்றியிருப்பதால் இப் பெருமகனாரை ஒரு நிறுவனம் என்று சொல்வது பொருந்தும்; ஒரு பல்கலைக் கழகம் என்று கூறினாலும் தவறு ஆகாது. ஒவ்வொருவரும் தத்தம் சமயங்களில் பற்றுக் கொள்வது மிகவும் இன்றியமையாதது என்பதை எவரும் மறுத்தற்கில்லை. அதே சமயத்தில் இதர சமயத் தவறைக் குறை கூறக் கூடாது என்பதும் இன்றி யமையாதது. பூர்வாசாரியார்களையும் அவர்தம் நூல்களையும் குறை கூறுபவர் எவராயினும் நம் சுவாமி அவர்களைக் கடுமையாகக் கண்டித்தே தீர்வர். இதன் காரணமாக வாத விவாத நூல்கள் எழுந்தன. தற்சமயம் தென்கலை - வடகலை என்று இரு பிரிவுகள் காணப் பட்டாலும் உண்மையில் பிள்ளை உலக ஆசிரியர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர் ஆகிய மூன்று பெரியார்களும் ஒரே கோட்பா டுடையவர்கள் என்பது சுவாமி அவர்களின் திடமானக் கருத்து. தவிரவும், தமது திடமான கருத்துகளுக்கு மறுப்புகளாக எழுதுபவர்கள் சம்பிரதாயத்தைச் சார்ந்த வித்துவான்களானாலும் கண்டிக்கத் தவறுவதில்லை. சுவாமி அவர்கள் எழுதிய நூல்களில் மூன்றில் ஒரு பகுதி இப்பகுதியைச் சார்ந்தவையாகவே இருக்கும்.