பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தோவியங்கள் 57 தொடங்கி இருபது ஆண்டுகள் நடத்தினார் நம் சுவாமி. 1948-இல் ரீராமாநுஜன் என்ற திங்கள் ஏடு தொடங்கப் பெற்று 480 இதழ்கள் வரை வெளிவந்துள்ளன. சமஸ்கிருதத்தில் வைதிக மனோகரர், தெலுங்கில் 'பூநீரா மாநுஜ பத்திரிகா', இந்தியில் ரீ வைஷ்ணவாஸ்தா' என்ற திங்கள் ஏடுகளும் சுவாமியால் நடத்தப் பெற்றன. சுவாமியின் ஒருநாள் நிகழ்ச்சி நிரல் : ஒரு நாளில் 24 மணியில் 23 மணி நேரம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தவர் நம் சுவாமி. பின்மாலையில் (அதிகாலையில்) எழுந்து வேத பாராயண பிரதட்சிணக் குழுவில் கலந்து கொண்டு விட்டு வெள்ளக்குளம் எழுந்தருளி தீர்த்தமாடிவிட்டு இராமாநுச நூற்றாந்தாதி அநுசந்தானத்துடன் நம்பிள்ளை சந்நிதிக்கு எழுந்தருளி கிரந்த காலட்சேபம் சாதிப்பார். அது நிறைவு பெற்றதும் நாடோறும் சுமார் 50 பக்கங்கள் எழுதுவார். அதற்குள் அச்சகத்திலிருந்து பார்வைப் படிவங்கள் (Proofs) வரும்; அவற்றைச் சரிபார்த்துத் திருத்தம் செய்வார். வந்த கடிதங் கட்குத் தம் கைப்பட மறுமொழிக் கடிதங்கள் எழுதி முடிக்கின்றனர். மாலையில் தேவப் பெருமாள் சந்நிதிக் குழுவில் கலந்து கொள்ளச் செல்வார். அது நிறைவு பெற்றதும் மீண்டும் எழுத்துப்பணி, பார்வைப் படிவங்களைச் சோதித்தல், கடிதங்கட்கு மறுமொழிக் கடிதங்கள் வரைதல் என்று இப்படி ஓய்வு ஒழிவின்றிப் பணிகள்.