பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் ஷஷ்டி ஜீயரிடமும், திரு. வை.மு. சடகோப ராமா நுஜாசாரியாரிடமும் தமிழ் பயின்றார். தாம் பயின்ற திறத்தை சுவாமியே செந்தமிழ் ஆராய்ச்சி என்ற நூலிலும், நான் கண்ட நல்லது என்ற நூலிலும் சிறப்பாகக் குறிப் பிட்டுள்ளார். அக்குறிப்பு வருமாறு : "கீர்த்தி மூர்த்தியான வை.மு.சடகோப ராமாநுஜாசாரியார் சுவாமியைத் தமிழ் உலகமும் வைணவ உலகமும் இன்றைக்கும் என்றைக்கும் போற்றும் என்பது நிர்விவாதம். அருளிச் செயல்களை சுத்த பரம்பரையில் ஓதி நம் ஆசாரியர்களின் வியாக்கியானங்களை நல்லாசிரியர் திருவடி களிற் பலகாலம் பணிந்து குனிந்து கேட்டவர் என்பதே அவருக்கு விசேஷித்த பெருமை. ரீமத் பரமஹம்ச சேத்தியாதி ரீகாஞ்சி அழகிய மணவாள ராமாநுஜ ஜீயர் சுவாமி திருவடிகளில் அடியேன் இலக்கண விலக்கியங்கள் வாசித்துக் கொண்டிருந்தபோது ஜீயர் சுவாமி யாத்திரையாக எழுந்தருள நேர்ந்தது. அப்போது வை.மு. சடகோப ராமாநுஜாசாரியர் சுவாமி காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி சில மாதங்கள் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது அவரிடத்தும் சில தமிழ் நூல்களை வாசிக்க அடியேனுக்குப் பாக்கியம் கிடைத்தது. (செந்தமிழாராய்ச்சி, 1943, பக்.45) கீழே குறிப்பிட்ட இரு பெரியார்களிடத்தும் கம்பராமாயணத்தைப் பாடம் கேட்டுப் பயின்றவர் நம் சுவாமி (பூரீ ராமாநுஜன் - 350) தமிழ்ப் பயிற்சி : தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளைக் கற்றுத் தோய்ந்த நம் சுவாமி வித்யா பரிச்ரம் பரீட்சா" என்ற கட்டுரையில் (பூரீ ராமாநுஜன் - 214) பகவத் விஷயதிகாரிகள் தமிழ் இலக்கண மரியாதைகளை நன்கு கற்றல் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். வடமொழியில் இல்லாது தமிழுக்கே சிறப்பாக உரிய மரியாதைகளை ஆழ்வார்கள் பிரயோகித்திருப்பதைச் சுட்டிக்