பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 61 காட்டுகின்றார். அவற்றின் பொருள் உணர்ச்சிக்குச் சங்க நூல்களின் துணை தேவை என்றும் உணர்த்துகின்றார். ‘துளையார் மென்குழல் ஆய்ச்சியர் (பெரி.திரு. 3.8:8) என்ற தொடருக்கு எவ்வாறு பொருள் எழுதுவது? குழலாகிய கூந்தலுக்குத் துளை உண்டோ? துளை பொருந்துவது புல்லாங்குழலுக்கே யாகும். துளை' என்ற அடைமொழி கூந்தலுக்கு ஏற்காது. எனவே, "துளைகள் நிரம்பிய புல்லாங்குழலைச் சொல்லக் கடவதான 'குழல்' என்ற சொல்லால் கூறப்படுகின்ற கூந்தலை யுடையவர் களான ஆய்ச்சிகள்” என்று பொழிப்புரை வரைய வேண்டும். இங்கே ஆழ்வார் சங்கப் பாடல்களில் வரும் அரியதோர் தமிழ் மரியாதையைப் பின்பற்றியுள்ளார். சங்க நூல்களிலிருந்து நம் சுவாமி எடுத்துக்காட்டுகளைத் தருகின்றார். (i) புல்லிலை வஞ்சிப் புரமதிலலைக்கும் பொருநை (புறம்-387) (i) "நெட்டிலை வஞ்சிக்கோ" (பரிபா, 102 பரிமேலழகர் உரை மேற்கோள்) இவ்விரண்டிகளிலும் வஞ்சிமா நகர் விவட்சிதமே யல்லாது வஞ்சிமரம் விவட்சிதம் அன்று. ஆயினும் விருட்ச விசேடப் பொருட்கு உரிய புல்லிலை, நெட்டிலை என்னும் அடைமொழிகளை அம்மரப் பெயர் அடைமொழிகளை அம்மரப் பெயர் கொண்ட வஞ்சிமாநகர்க்கு ஏற்றியுள்ளார்கள். (iii) ஒளிதிகழ் உத்தி உருக்கெழு நாகம்" (பரிபா.12) "நாகம் என்னும் சொல் புன்னை மரத்துக்கும் பாம்புக்கும் பெயர். பரிபாடலில் நாகம் என்ற சொல்லை யிட்டுப் புன்னை மரத்தைப் பேசுங்கால் பாம்புக்குரிய அடைமொழியைப் புன்னைக்கு இட்டனர். இவ்வாறு தமிழில் ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தால்