பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் போனால் உண்டாகும் துக்கம் மிகுதியானது. அவ்வாறே இதிகாசத்தைக் கண்ணுற்றால் திரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது கண்ணபிரானின் திருநாமமேயாயினும் தான் நேரில் சென்று உதவாத துக்கத்தைக் காட்ட, கண்ணன் திருவுள்ளம் புண்பட்டுக் கதறினது அனைவரும் அறிந்ததே. மேலும் எம்பெருமான் ஆனையின் துயரம் தீர அரைகுலைய தலைகுலைய மடுக்கரைக்கு ஓடி வந்து உதவினான். இது பிறர்க்காகப் படும் துக்கம் என்பதும் வெள்ளிடை மலை. இவ்வாறு நம்பிள்ளை உரையின் உட்பொருளை, எடுத்துக்காட்டுகளுடன் தக்கவாறு காட்டியும் அதே சமயத்தில் எம்பெருமானுக்குள்ள கல்யாண குணத்தை நிலைநாட்டியும் சுவாமிகள் உரைப்பது அறியலாம். ஆனையின் துயரம் தீர எம்பெருமான் அரைகுலைய தலைகுலைய ஓடிவந்ததைப் போதன்ன பாகவதத்தில் சுவையாக விளக்கப் பெற்றுள்ளதை என் அரிய நண்பர் டாக்டர். கோதண்ட ராமய்யா (அமரர்) பாடிக் காட்டியதை (சுமார் 13 பாடல்கள்) மறக்க முடியவில்லை. இதனை 'இடைப் பிறவரல் என்று கருத வேண்டா, சுவைக்காகக் காட்டுகின்றேன். யானையொன்று தடாகத்தில் ஆண்டுக்கு ஒன்றாக மலரும் தாமரைப் பூவை அதன் கரையில் அர்ச்சை வடிவமாக எழுந்தருளியிருக்கும் சீமந்நாராயணன் தலையில் போடுவது வழக்கம். 1008-வது மலரைப் போடும் ஆண்டு. தடாகத்தில் இறங்கி மலரைப் பறிக்கும்போது தடாகத்தில் வசித்து வந்த முதலை ஆனையின் காலைப் பற்றிக் கொண்டது. யானை, பக்தியின் துடிப்பால் 'ஆதிமூலமே! என்று கதறுகின்றனது." அப்பொழுது வைகுண்ட நாதன் பெரிய பிராட்டியாராடு மகிழ்வுரையில் ஈடுபட்டுருந்தமையால் குரலைக் கேட்க