பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 65 வில்லை. ஆனால் அவன் தாங்கிக்கொண்டிருக்கும் ஆயுதங்கள் ஒவ்வொன்றாகக் கிளம்பி வந்து கொண்டிருக் கின்றன. இறைவனுடைய திவ்வியாயுதங்களுக்கும் தனியாக இயங்கும் ஆற்றல் உண்டு என்பது வைணவ தத்துவம். அவை வரும் முறையை போதன்ன என்ற தெலுங்குக் கவிஞர் வெவ்வேறு சந்தங்களில் (கதி என்பர் தெலுங்கில்) அற்புதமாகப் படைத்துள்ளார். நண்பர் டாக்டர் கோதண்ட ராமய்யா அவர்கள் தமது இனிமையான குரலில், கதிக் கேற்றவாறு தமது குரலை மாற்றிக் கொண்டு பாடும் போது 'இன்னும் பாடுக, இன்னும் பாடுக என்று கேட்கத் தோன்றும். (2) இன்சுவை மிக்க பொருள் காட்டல் : (i) தோழிப் பாசுரமாக நடைபெறுவது : 'தண்திருப் புலியூர், முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினள்' என்பதைக் கூறுவது. இதற்குச் சான்று காட்டுவதாக வருவது: திருவருள் கமுகு ஒண்பழத்தது மெல்லிய செவ்விதழே (திருவாய் 8.9:6) ‘எம்பெருமான் திருவருளால் இத்திருப்பதியில் வளர்ந்த கமுகு - திருவருள் கமுகு - ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை யொத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்' என்கின்றாள். திருவருள் கமுகு' 4. இந்தக் குரல் அண்டமெல்லாம் எட்டுகின்றது. ஒவ்வொரு கடவுளரும் நினைத்துப் பார்க்கிறார்களாம். தாம் 'ஆதிமூலம் அல்ல என்று கருதி வராமலே இருந்து விட்டார்களாம். சீமந் நாராயணன் மட்டும் தாம் 'ஆதி மூலம் என்று உன்னி வந்து முதலையைக் கொன்று யானைக்கு பூவை நல்கும் வாய்ப்பு அளித்தாராம். இப்படிச் சிந்தித்து வைணவ பக்தர்கள் மகிழ்வார்கள். ஆனால் அர்ச்சை வடிவமாக இருக்கும் நாராயணன் குளத்தில் இறங்கி பூவை ஏற்றுக் கொள்ள முடியாமையால் வைகுண்டநாதன் ஓடிவந்து முதலையைத் திருவாழி ஆழ்வானால் நிரசித்து யானை தந்த மலரை ஏற்றுக் கொண்டான் என்ற வைணவ தத்துவம் விளக்கப் பெறுகின்றது.