பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 67 தேவஸ்லர்வம் என்றிருக்கின்ற மகாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே! என்றன்றோ சொல்லுகின்றான்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகின்ற தன்றோ? எம்பெருமானார் ரீபாஷ்யத்தில் - பூரீ பாஷ்யத்தின் முடிவில் - ஜநாநி நம் லப்தவா" என்கின்ற அற்புதமான ரீஸ்-க்தியில் இப்பரமார்த்தம் தன்னை ஆழ்வார் சுவாதுபவ முகத்தாலே இப்பாசுரத்தில் வைத்தருள்கின்றார். மேலும், இப்பாசுரத்தில் "என்னில் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்" என்றது சத்சம்பிரதாய சுவைஞர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. ‘உன்னைக் காணில் வாரிக்கொண்டு விழுங்குவேன்' என்று தாம் ஆசைப்பட்டிருந்ததாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ங்னே பாரித்திருந்து தன்னுடைய மநோரதமே வலிதென்றும் அதுதான் முற்பட்ட தாயிருந்து கார்யகரமாகின்ற தென்றும் சொல்லிற்றாயிற்று. கீழ்ப்பாசுரங்களில் 'என் உயிருண்டமாயன் (7) என்றும் என்னுயிர் தானுண்டான் (8) என்றும் எம் பெருமான் உண்ட படியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணிரும் அபேட்சிதமாயிருக்குமே; தண்ணி குடித்தபடி சொல்லிற்று இப்பாசுரத்தில் "தான் என்னை முற்றப் பருகினான்" என்று. இவருடைய உண்ணுஞ்சோறு பருகு நீர் அவன்; அவனுடைய உண்ணுஞ்சோறு பருகு நீர் இவர். இங்கு தம்மை மறந்து இப்பாசுரத்தை நம் சுவாமிகள் அநுபவித்ததைக் காண முடிகிறது. (3) இலக்கணக் குறிப்புகள் : சுவாமிகள் பாசுர விளக்கங்களில் இலக்கணக் குறிப்புகளைக் காட்டியுள்ளதை நோக்கும் போதும் அவர்தம் தமிழ்ப் புலமையையும் தமிழார்வத்தையும் தமிழ்ப் பற்றையும் காணமுடிகின்றது. ஈண்டு ஒரு சிலவற்றைக் காட்டுவேன்.