பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (v) பாட பேதம் காட்டல் : திருவாய்மொழி (6.8) தலைமகள் பறவைகளைத் தூதுவிடும் பதிகமாகும். இதில் 8-ஆம் பாசுரத்தில் 'அருள் செய்து ஒரு நாள் (2-ஆம் அடி) என்ற பாடமே நம்பிள்ளை முதலாக ஆசாரியர்களின் காலத்தில் வழங்கி வந்தது. இப்பாடத்தில் வினைமுற்று (கிரியாபதம்) இல்லையாகிறது. குருகிடம் 'நீ போய்ச் சொல்ல வேணும்' என்கின்ற வேண்டுகோள் இருக்க வேணுமே; அ ஃது இங்கு இல்லை; ஆனாலும் வருவித்துக் கொள்ளலாம் என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம். பன்னிராயிரப்படி ஆசிரியர் வாதிகேசரி ஜீயர் அருள் செய் ஒருநாள்' என்று பாடம் காட்டுகின்றார்; அருள் செய்து' என்று பாடமானபோது என்று சொல் என்று வாக்கிய சேஷமாகக் கூடாது" என்று எழுதியுள்ளார். அருள் செய்து என்று வினை எச்சமான பாடமே பிரசித்தம் என்று நம் சுவாமிகள் அதனையே கொள்வார். தொடர்ந்து ஈற்றடியின் முதலிலுள்ள ஏசறு என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டியருள்கின்றார் என்பதையும் சுட்டியுரைத்து தம் கருத்துக்கு அரணாக்கிக் கொள்வர். ஏசறு - துக்கப்படு. 'நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு' என்பது தாற்பரியம். இவ்வாறு விளக்குவர் நம்சுவாமிகள். (vi) சில மரபுகள் : இதனைக் காக்க வேண்டும் என்பர் நம் சுவாமி. வியாக்கியானத்தில் சக்ரவர்த்தித் திருமகன் என்று வருகிறது. அது பிழை என்று காட்டி விளக்கமும் தருவார் நம் சுவாமி. "சக்கர வர்த்தி என்பது தசரதனைக் குறிக்கும். அவனுடைய மகன் என்ற பொருளில் சக்ரவர்த்தி திருமகன் என்று ஒற்று மிகாது வரவேண்டும். வேற்றுமைத் தொகையன்றோ?" என்பர். இங்ங்னமே "பிள்ளை திருநறையூர் அரையர்” என்று ஒற்று மிகாது எழுத வேண்டும்" என்பர்.