பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 71 (vii) தமிழ் மரபுகளைக் காத்தருளல் : சுவாமி தாம் எழுதிய உரைநடைகளில் வடசொற்களை யிட்டு எழுதுதல் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆயின் அவற்றின் உருச் சிதைவினைச் சகிக்கமாட்டார். பெரும்பாலும் வடமொழி வடிவத்திலேயே பிரயோகித்து எழுதுவார். அவ்வாறு எழுதுவதிலும் அவர் செய்த சிட்சைகள் பல உள்ளன. சான்றாக ப்ரஹ்ம்' என்று எழுதுவதே நேர்மையானது; 'ப்ரம்ஹ என்று எழுதுவோரைக் கண்டித்தார். தாம் எழுதிய செய்யுட்களில் சுவாமி தமிழ் வரம்புகளை மீறிய தில்லை. ஷ, ஜ, ஸ, ஹ என்ற கிரந்த எழுத்துகள் வரும் சொற்களைத் திரித்தே செய்யுளில் வழங்கவேண்டும் என்று வலியுறுத்துவார். ரீ' என்ற சொல்லும் தமிழில் பயிலாது என்றும், அதனைத் 'திரு' என்று பெயர்த்தோ அல்லது 'சீர்' என்று திரித்துத் தற்பவமாகவோ தான் வழங்கவேண்டும் என்பது அவர்தம் கொள்கை. சீர் வசன பூடணம் என்ற உபதேச ரத்ன மாலைப் பிரயோகத்தைக் காட்டி 'பூரீபாஷ்யம்' என்பது போன்று செய்யுளில் வழங்குவதைக் கண்டித் துள்ளார். (சாஸ்த்ரார்த்த சந்த்ரிகை, முதல் மலர், 1951) (viii) கொச்சையான சொற்கள் : தமிழ் உரை நடையில் கொச்சையான சொற்களையோ பேச்சு வழக்கான சொற்களையோ இலக்கண வரம்பை மீறிய சொற்களையோ பயன்படுத்துதல் சுவாமிக்குப் பெரிதும் மனவருத்தத்தை ஏற்படுத்தும். கற்றறிந்த பெரியார் ஒருவர் தம் கட்டுரையொன்றில் "முயற்சிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது" என்று எழுதியிருந்தார். அதனைக் கண்ணுற்ற நம் சுவாமி "முயற்சி என்கின்ற சொல் உண்டேயல்லது அதன் மேல் ஒரு ப்ரத்யய மேற்றி முயற்சிக்க' என்பது பரிஹாஸ்யங் களிலும் கடையானது" என்று கண்டித்தார். மற்றொருவர் "முயற்சிக்கிறேன்" என்று எழுதியபோது 'முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கன்பையே (கண்ணி நுண்.10) என்ற மதுரகவிகளின் திருவாக்கினை நினைவுப்படுத்தித்