பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் மங்கை மன்னரும் காஞ்சி மன்னரும் : முன்னவர் நாட்டையாண்ட மன்னர்; பின்னவர் வைணவத் தமிழுலகை யாண்ட மாமன்னர். முன்னவர் தம்மை இருந்தமிழ்நூற் புலவன்' (பெரி.திரு.1.8:10) என்று சிங்கவேள் குன்றத் திரு மொழியில் குறிப்பிடுவர். இவர்தம் ஆறு பிரபந்தங்களும் மாறன் அருளிய மாமறைக்கு ஆறு அங்கங்கள் என்று வகுத்துக் கூறுங்கால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இருந்தமிழ் நூற் புலவர் பனுவல் ஆறும் என்று குறிப்பிடுவர். அதனால் இருந்தமிழ் என்று கலியனால் கருதப்பெற்றது நம்மாழ்வாருடைய நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகும் என்பது தெளிவு. திருமங்கையாழ்வார் தம்மை இருந்தமிழ் நூற் புலவன் என்று குறிப்பிட்டுக் கொண்டது அவ்வாறே முற்றிலும் நம் சுவாமிக்குப் பொருந்துகின்றது. கலியனுக்குப் பிறகு நாம் கண்ட இருந்தமிழ் நூற்புலவர் காஞ்சி சுவாமியே. முன்னவர் பரகாலர் பின்னவர் பிரதிவாதி பயங்கரர். நம் சுவாமியின் இருந்தமிழ்ப் பணியே அருந்தமிழ்ப் பணியாகும். இத்தெய்வப்பணி வாய்ப்பணியாகவும் (சொற் பொழிவுகள்), கைப்பணியாகயாகவும் (எழுத்துப் பணி நூல்கள்) இருவகைப்பட்டு நடந்து கொண்டிருந்தன. அவை சுவாமிகளின் இறுதி மூச்சு வரை நடைபெற்று வந்தமை அவர் வழிபட்டு வந்த அருளாளப் பெருமானின் திருவருளாலேயாகும் என்று நாம் நம்புவோம்; வைணவ உலகமும் அவ்வாறே நம்புகின்றது. பாராட்டுரைகள் : சுவாமியின் வாழ்நாள் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பேரறிஞர்களாகவும் பேரறிவாளர்களாகவும் திகழ்ந்தவர்கள் மூவர் (1) ஒருவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பேராசிரியராகவும் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் என்ற இதழ் ஆசிரியராகவும் திகழ்ந்த திருநாராயண ஐயங்கார்