பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 75 சுவாமி. நம் சுவாமியால் கண்கண்ட அகஸ்தியர் என்று பலகாலும் கொண்டாடப் பெற்றவர். இத்தகைய பெரியார் நம் சுவாமியின் தெய்வத் திருப்பணியை 1914 இல் செந்தமிழ் இதழில் பாராட்டி எழுதி 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார். பாராட்டுரை: திவ்வியப் பிரபந்தங்கட்குத் 'திவ்வியார்த்த தீபிகை என்னும் பெயரால் ஒரு தமிழுரை காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகளால் எழுதப்பெற்று பதிப்பித்துப் பிரசுரம் செய்யப் பெற்று வருகிறது..... இவ்வாசிரியர் இளமைப் பருவம் பொருந்திய வராயினும் வடமொழி தென்மொழி தெளிந்த ஞானம் பெற்று சாஸ்திர சம்பிரதாயங்களை களங்கமறக் கற்று உபந்யாச வகையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்....... ஆழ்வார்களின் அருளிச் செயல்கட்கு இவரால் எழுதி அச்சிடப்பட்டு வருகிற தமிழுரையை நோக்குங்கால் இவர் செந்தமிழ்ச் செல்வர் என்னும் சிறப்புப் பெயர் பெறுவதற்கு உரியவர் என்பது தெற்றென விளங்கும்.... மிக்க ஆராய்ச்சியுடன் எழுதப்பெறுகின்ற இவ்வுரை சம்ஸ்கிருத்ததில் பயிற்சி இல்லாத தமிழர்களும் பொருள் உணருமாறு எழுதப்பெற்றிருத்தலால் ஆத்திகர் அனைவருக்கும் இது அவசியமேயாகும்" (2)அடுத்தபடியாக சேது சமஸ்தானம் மகாவித் துவானாக விளங்கியவரும் 'பாரி காதை இயற்றிய பெருங்கவிஞராகத் திகழ்ந்தவருமான ரா. இராகவையங்கார் சுவாமி நம் அண்ணங்கராசாரிய சுவாமிகட்குப் புகழாரம் அணிவித்திருக்கிறார். அந்த மதிப்புரை வருமாறு : "நம் பூர்வாசாரியர்கள் அருளிச்செய்த வியாக்கி யானங்கள் அறிதற்கரியனவாய் அதிக வடமொழிக்