பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சுவாமியின் இறையதுபவம் காஞ்சியில் அவதரித்த நம் சுவாமியின் மீது அத்திகிரி அருளாளரின் திருவருள் வெள்ளங் கோத்துப் பாய்ந்த மையால் அவர் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டு அவற்றின்மூலம் எம்பெருமானை நன்கு அநுபவிக்கின்றார். பாசுரங்களின்மீது இவர் கொண்ட ஆழ்ந்த நோக்கு இவர்தம் இறையநுபவமாக வெளிப்படுகின்றது. அந்த அநுபவம் இவர்தம் உரைகளில் பாய்ந்து அவை நமக்குத் தேனாய், பாலாய், கன்னலாய் அமுதமாய் இனிக்கின்றது. சில சமயம் பொருள்களுடன் இறைவனை ஒப்பு நோக்க வைத்து அதுபவமாக வெளிப்படுகின்றது. எடுத்துக்காட்டாக திருவாய்மொழியில் ஒரு பாசுரம் : பங்கயக் கண்னன் என்கோ? பவளச்செவ் வாயன் என்கோ? அங்கதிர் அடியன் என்கோ? அஞ்சன வண்ணன் என்கோ? செங்கதிர் முடியன் என்கோ? திருமறு மார்வன் எங்கோ? சங்குசக் கரத்தன் என்கோ? சாதிமா னிக்கத்தையே! இந்தத் திருவாய்மொழியின் அவதாரிகையிலே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா, அடிமை செய்ய வேண்டும் நாம் (திருவாய். 3.3:1) என்று எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று பாரித்த ஆழ்வாருக்குத் தாம் அவர் விரும்பியபடியே