பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையதுபவம் 79 செய்வதற்கு அநுகூலமாக எல்லாப் பொருள்களிலும் பிரவேசித்து எங்கும் நிற்கின்ற நிலையைக் காட்டிக் கொடுத்தான். அதுகண்ட ஆழ்வார் பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக் கருதுபவர்கள் 'அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை எடுப்போமா? என்று அலமந்து கிடப்பதுபோல், அத்தைச் சொல்லுவேனா? இத்தைச் சொல்லுவேனா? என்று அலமந்து, எங்கும் எல்லாவகைப் பொருள்களுமாயும் தோன்றுகின்ற அப் பெருமானுக்கு வாசிகமாகக் கைங்கரியம் செய்ய நினைத்து ‘சகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம் பெருமானுடைய தன்மையை யான் என்னவென்று சொல்லு வேன்? என்று நிர்வேதத்துடனே அவனது சர்வாத்மத்தைப் பேசுகின்றார் இத்திருவாய் மொழியில். அதில் மூன்றாவது பாசுரம் இது இதற்குச் சுவாமியின் அநுபவ உரை இது : "ஆழ்வார் தம்மைக் கடாட்சித்து தம்மோடு முதலுறவு பண்ணின திருக்கண்களின் அழகில் ஈடுபட்டு முதலில் 'பங்கயக் கண்ணன் என்றார். அந்தக் கண்ணோக்குக்குத் தப்பினாலும் தப்ப வொண்ணாத புன்முறுவலையுடைய வாயழகில் ஈடுபட்டுப் பவளச் செவ்வாயன்' என்றார். அந்த நோக்கத்திலும் புன்சிரிப்பிலும் ஈடுபட்டுத் தோற்றுவிழும் நிலமாகிய திருவடிகளில் ஈடுபட்டு 'அங்கதிர் அடியன்' என்றார். அத்திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகில் ஈடுபட்டு 'அஞ்சன வண்ணன் என்றார். அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகையுடையவன் ஈடும் எடுப்பும் இல்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியழகில் ஈடுபட்டுச் "செங்கதிர் முடியன்” என்றார். திருமுடியினால் விளங்குகின்ற சுவாமித்துவத்தைக் கண்டு 'இப்பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது' என்று கருதி பின் வாங்காதபடி எப்போதும் அப்பெருமானின் திருமார்பில் 'அகலகில்லேன் இறையும் என்று இருந்து புருஷகாரம் செய்யும் தாயான பிராட்டியின் சம்பந்தத்தைக் கருதித் திருமறுமார்பன்' என்றார் பெருமாளும்