பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையறுபவம் 83 சுவாமி அருளிய இவற்றைப் படிக்கும் நாமும் அவரோடு சேர்ந்து இறையநுபவத்தைப் பெறுகின்றோம். 2. நீர் : (திருநெடுந் 8) நீரகத்தாய்! நீரின் இயல்பை உடையவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதல்பற்றி இத்தலத்திற்கு நீரகம்' என்ற திருநாமமாயிற்று. இவ்விடத்து எம்பெருமானை நீரகத்தாய்! என விளிக்கின்றார். நீருக்கும் எம்பெருமானுக்கும் இயல்பாகவுள்ள ஒற்று மைகளை நம் சுவாமி நிரல்படுத்தி அநுபவித்து மகிழ்கின்றார். அவற்றைக் காண்போம். (1) நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமானும் சாதி முதலியவற்றால் குறைந்த வரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்க் காகத் தூது எழுந்தருளும்போது ஞானத்தால் சிறந்தோம்' என்றிருக்கும் வீடுமரையும் துரோணரையும், செல்வத்தால் சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொருளாக மதியாமல் இவையெல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதியிருந்த விதுரருடைய திருமாளிகையிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான். ஆகவே பள்ளத்தை யோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும். (2) நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பியதை வோறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ்வேறு விருப்பத்தையுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அது போலவே எம்பெருமானையும். 1. காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியில் உள்ளது.