பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (3) நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம் பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறியாயிருக்கும் "நீரிலே நெருப்புக் கிளறு மாப்போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்" என்ற முமுட்சுப்படி திவ்விய சூக்தி காண்க. (4) நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். "தரு துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை" என்றார் குலசேகரப் பெருமாள். (5) நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஒட விடவும் உரித்தாயிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே, ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்தாலே ஓலை கட்டித் தூது நடந்தான். (6) நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயுமிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கது மாயிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம், உபேயத்துவம் என்ற இரு தன்மைகள் உண்டல்லவா? எம்பெருமானைக்கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக் கொள்வாரும் உள்ளமை காண்க. (7) அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய் கனி கிழங்கு வேர் பலா முதலியவற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதியொன்றையும் சகிக்கமாட்டாது நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாதுசந்தத்தாலும் போது போக்குதல் அரிது. "ஒருநாள் காண வாராயே" "அடியேன் தொழ வந்தருளே’ என்று பிரார்த்தித்துப் பெற்றே தீரவேண்டும். 2. முமுட்சு - 127 3. பெரு.திரு. 5:1 4. திருவாய் 8.5:1 5. மேலது 5.7:6