பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான்

7


வாழ்வாகிய எட்டு ஆண்டுகளில் என் அன்னையார் இருவர் பிரிந்தமையும் வேறு பிற நிகழ்ச்சிகளும் என்னை இதை எழுதி வெளியிடத் தூண்டின என்பதோடு, பிற காரணங்களை முன்னுரையிலும் காட்டியுள்ளேன். என் அன்னைக்கு என் ஊரின் பக்கத்திலேயே நிலைத்த நினைவுச் சின்னம் ஏற்படுத்த வாங்கிய நிலமும் (நூலில் குறிக்கப்பெற்றது) தற்போது என் வசம் இல்லை. எனவே இன்று அண்ணாநகரில் உள்ள அன்னையின் பெயரால் அமைந்த அறப்பணியினைச் செம்மையுறச் செய்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அதற்கும் தான் எத்தனை இடர்ப்பாடுகள்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த காஞ்சி வாழ்க்கையின் கூறுகள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன். அக்காலத்தில் வேறு நிகழ்ச்சிகள் பலவும் இன்று என் கண்முன் நிழலிடுகின்றன. எனினும் பத்தாண்டுகளுக்கு முன் எழுதியதை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ வெளியிடக் கூடாது என்ற எண்ணத்திலே இந்த அளவில் இந்த நூலை உங்கள் முன் வைக்கின்றேன்.

காஞ்சி வாழ்வின்போது நான் அதிகமாகக் கவிதைகளை எழுதினேன். பல அக்காலத்தில் வெளிவந்த தமிழ்க் கலையில் இடம்பெற்றன. அவற்றுள் ஒன்றே என் அன்னைக் கென வெள்ளத்தைத் தூதனுப்பிய ‘வெள்ளம் விடு தூது’ ஆகும். 1939ல் எழுதப் பெற்ற அந்த இலக்கியத்தை இணைத்து என் அன்னையின் பாதப் போதுகளுக்கு இந்த நூலை உரிமையாக்க வேண்டும் என்ற உணர்விலேயே அந்த நூலையும் இதில் உடன் இணைத்துள்ளேன். அப்படியே அக்காலத்தில் வாழ்ந்து எனக்கு வழிகாட்டிகளாக இருந்து இன்று மழை இருந்து இன்று மறைந்து அருளும் பல பெரியவர்களுக்கும் என் தலைதாழ்ந்த வணக்கத்தைச் சொல்லிக்கொள்ளக் கொள்ளக் கடமைபப்பட்டவனாகின்றேன்.

காலம் நமக்கென நிற்பதில்லை. ‘நிகழ்காலம்’ என்ற ஒன்றே இல்லை என்று அறிஞர்கள் கூறும் அளவுக்குக்