பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

காஞ்சி வாழ்க்கை


தமிழ்க்கலை நாட்டிற்கும் மொழிக்கும் நல்ல சேவை செய்தது. அப்படியே தமிழ்க்கலை அச்சகமும் நன்கு பொதுமக்களுக்கு உதவிற்று. அதைத் தொடங்கும் போது குமரன் அச்சக உரிமையாளர் திரு. தவசி. குப்புசாமி முதலியார் அவர்களை அணுகினேன். அவர்கள். அதைத் தொடங்குவதற்கு வேண்டிய எல்லாத்துறைகளையும் விளக்கி, வேண்டிய உதவியையும் செய்து, அவரிடம் முன்னரே பணிபுரிந்திருந்த நல்ல சிலரை எனக்கு உதவுமாறும் அனுப்பி வைத்ததோடு, தொடங்கிய வேளையில் உடன்இருந்து வாழ்த்தியருளினர். நல்லவர் வாழ்த்த அச்சகம் நன்கு வளர்ந்து வந்தது. பொருளாதார முட்டுப்பாடு தொடர்ந்து வந்திருந்த போதிலும் அச்சகம் நன்கு வளர்ந்தே வந்தது. திங்கள் இதழும் சிறக்க ஓங்கிற்று. காஞ்சியில் இருந்த பல அன்பர்கள் விளம்பரம் தந்தும் உதவினர். நான் கடைசியில் சென்னைப் பச்சையப்பரில் பணி ஏற்க வரும் வரையில் அச்சகம் கூட்டாகவே இயங்க, நான் வரும்போது அதைத் திரு. காளப்பருக்கு உரிமையாக்கி, பெயரை மட்டும் நான் ஏற்று வந்தேன். பிறகு சென்னையிலேயே அதே பெயருடன் தமிழ்க்கலை இதழ் நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. இடையில் உண்டான போரின் காரணமாகக் காஞ்சியில் நடைபெற்று வந்த இதழ் நான்காண்டுகள் கழித்து நிறுத்தப்பெற்றது. பிறகு அச்சகம் மட்டும் தொழிற்பட்டு வந்தது. போரின் காரணமாகத் தாள் விலை ஏறிய காலத்தில் ஒருசிறு தொகையை மூலதனமாக வைத்து, தாள்களை வாங்கி வைத்திருந்தாலும் நாங்கள் பெருஞ்செல்வர்களாயிருப்போம். ஆயினும் எங்களில் ஒருவரும் பெருஞ் செல்வர் அல்லராகிய காரணமும் அத்தகைய வாணிப நுணுக்கம் அறியா நிலையும் எங்கள் வாழ்வை அன்று உயர விடவில்லை. எப்படியோ அச்சகம் நன்கு நடைபெற்று வந்தது.

அச்சகப்பணி செம்மையாக நடைபெற்ற காலத்தில் நானும் காளப்பரும் நன்கு பழகினோம். இருவரும் உடன்