பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்க் கலையின் தோற்றம்

105



மாட்டாது எங்களோடு காஞ்சிபுரம் வந்து சேர்ந்து விட்டார்கள்.

அடுத்த ஆண்டிலே அன்னையர் இருவரையும் மைந்தனையும் ஒரு சேரப் பிரிய வேண்டிய சோகநிலை உருவாயிற்று. இறைவன் ஏனோ எனக்கு உறுதுணையாயிருந்த அன்னையர் இருவரையும் ஒருசேர எடுத்துக்கொண்டார். அவர்கள் இருவரும் இருந்த காரணத்தால் நான் குடும்பப் பொறுப்பையோ வேறு விளை நிலங்கள் கொடுக்கல் வாங்கல் ஆகிய பிற பொறுப்புக்களையோ எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. இறைவன் நானே முயன்று என் காலிலேயே நிற்க வேண்டிய பொறுப்பை உணர்த்தத்தானோ அவ்வாறு செய்தான் என எண்ணவேண்டியிருந்தது. எனது அன்னையாருக்கு காலில் கட்டிகண்டது. ஊரில் வைத்தியம் செய்து பயனடையாமல் போகவே, காஞ்சிபுரம் வந்து வீட்டிலிருந்து கொண்டே நல்ல மருத்துவமும் அறுவை சிகிச்சையும் செய்தோம். எனினும் ஒன்றும் குணமாகவில்லை. தை மாதத்தில் ஓர் வெள்ளிக்கிழமையில் அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறையுமுன் அவர்கள் கூறிய சொல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தூரத்தே நின்றிருந்த என்னை அருகேஅழைத்து நான் வருகிறேன், தேங்காய் உடை, கற்பூரம் கொளுத்து என்றனர். அவர்கள் சொல்லியதைச் செய்து முடிப்பதற்குள் அவர்கள் தலை சாய்ந்தது. மலை என வளர்ந்த என் வாழ்வும் மங்கியது; வாடினேன். பெரிய அன்னயாரும் பிறரும் தேற்றினர். ஏனோ தெளிவு பிறக்கவில்லை. பிறகு அந்த ஆண்டு முழுதும் நான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. உலகமே திரண்டு வந்து வாடிய அந்த நாளிலும் முன்னவளும் பேரனாகிய மயில்வாகனனும் அருகில் கூட வரவில்லை.

அன்னயாரின் இறுதிச் சடங்குகள் விழாவென நடைபெற்றன. திரு. வி. க., தெ. பொ. மீனுட்சிசுந்தரனார்ர, C. M. இராமச்சந்திரன் செட்டியார், ரா. பி. சேதுப்பிள்ளை,