பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் வாழ்வும்

111


தார்கள். நான் குடும்பச் சூழ்நிலையில் அமைதியாக இருக்க நினைக்கிறேன் என்று கூறி வேண்டியும் அவர்கள் விடவில்லை. அவர் தம் விருப்பப்படி அவற்றின் உறுப்பினனாக இருந்து செயலாற்றினேன்.

செங்கற்பட்டு மாவட்டம் முழுதும்—சிறப்பாக காஞ்சி வட்ட ஊர்கள் அனைத்திலும் நான் சென்று சொற்பொழிவாற்றினேன். உலகப்போரின் நிலை பற்றியும் அதில் நம் நாடு கலந்துகொள்ள வேண்டிய தேவை நேர்ந்தமை பற்றியும் நம் நாட்டு மக்கள் பொன்னாலும் பொருளாலும் மக்களாலும் பிற தியாகங்களாலும் எவ்வெவ்வாறு உதவ வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாகப் பேசினேன். ஒவ்வொரு ஊரிலும் எண்ணற்ற மக்கள் அப்பேச்சுக்களைக் கேட்டு உதவ முன்வந்தனர். அக்காலத்தில் காஞ்சியில் துவாரகா நாத ஐயர் என்பவர் தாசில்தாராக இருந்தார் என எண்ணுகிறேன். இன்னும் பல அதிகாரிகளும் நல்ல தொண்டு ஆற்றினர். எப்போதும் என்னை அவர்கள் தங்கள் காரிலேயே எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். நானும் இந்த ஈடுபாடுகளினால் ஓரளவு குடும்பச் சூழ்நிலையை எண்ணி எண்ணி ஏங்க நேரமில்லா வகையில் அமைதியாக வாழ்ந்து வந்தேன்.

ஒரு காலத்தில் ‘சென்னை மாநிலத்தின்’ போர் உதவிக் குழுவின் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டம் பெரும் அளவில் கிண்டிக் குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்றது. மாநில ஆட்சித் தலைவர் கவர்னர் தலைமை வகித்தார். பலர் பங்குகொண்டனர். நானும் அதில் பேச வேண்டி இருந்தது. காஞ்சிபுரம் தாசில்தார் உட்பட பல அதிகாரிகளும் நானும் இன்னும் சில முக்கியமானவர்களும் அந்த கூட்டத்திற்காகச் சென்னை வந்தோம். குதிரைப் பந்தயத்தின் கொடுமையைப் பல முறையில் கேட்டிருக்கிறேன். நானே என் தமிழ்க் கலையில் அது பற்றி எல்லாம்–அதனால் மக்கள் நைந்துபோகும் நிலைபற்றி