பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் வாழ்வும்

115


டினர். அதன் விளைவால் நாடெங்கும் காங்கிரஸ் ஆட்சியினர் பதவியினை இராஜிநாமா செய்து வெளியேறினர். ஏறு முன் கண்டனக் கூட்டங்களில் தீர்மானம் இட்டு, ஆங்கிலேயர் தம் அடாத செயலைக் கண்டித்து வெளியேற வேண்டும் என்ற முடிவும் இருந்தது. நாட்டுத் தலைவர்களும் அவையாளரும் அவ்வாறே செய்தனர். எனது செங்கற்பட்டு மாவட்டக் கழகமும் அவ்வாறு செயல்படத் திட்டமிட்டு, கூட்ட நாளும் குறித்தது, நாங்கள் எதிர்க் கட்சியில் இருந்ததை முன்னரே குறித்துள்ளேன். எங்கள் தலைவர் திரு. சண்முகம் பிள்ளை அவர்கள் என்னை அந்தக் கூட்டத் தில் காங்கிரஸ்காரர் ‘வெள்ளையனை வெளியேறு’ என்று தீர்மானம் இட்டுத் தாங்கள் இராஜிநாமா செய்ய இருப்பதையும் எதிர்க்கட்சிக்காரர்களாகிய நாங்கள் அதை எதிர்க்க வேண்டுமெனவும், அவ்வாறு எதிர்த்தால் தொடர்ந்து நியமனம் செய்யப்பெறும் அவையில் நாங்களெல்லாம் இடம் பெறுவோம் எனவும் அதற்காக அரசாங்கம் சட்டம் தீட்டியுள்ளதெனவும் எழுதியிருந்தார். எனினும் அவ்வாறு செய்ய என் உள்ளம் இடம் தரவில்லை. அண்ணல் காந்தி அடிகளார் போன்ற பெருந்தலைவர்களெல்லாம் அல்லல்பட்டு ஆற்றாது நாட்டுக்காகப் பாடுபடும் வேளையில் நமக்குப் பதவி எதற்கு எனவே ஒதுங்கி நின்றேன்.

எனவே அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துக்கு நான் செல்லவில்லை. அவருக்கும் பதில் எழுதவில்லை. கூட்டம் முன் ஏற்பாட்டின்படி தீர்மானத்தை நிறைவேற்றிக் கலைந்து விட்டது. மாவட்டக் கழக ஆட்சி கலெக்டர் கையில் வந்தது. உடன்–ஒருவாரத்துக்குள் என எண்ணுகிறேன்–மாற்றுக் கழகம் பொறுப்பேற்குமெனவும் அதில் உறுப்பினர் யார் யார் என்றும் பத்திரிகைச்செய்தி வரக்கண்டேன். நல்லவேளை அதில் என்பெயர் இல்லை. பின்பு ஒரு கூட்டத் தில் என்னைக் கண்ட ‘கலெக்டர்’ அக்கூட்டத்துக்கு வந்திருந்தால் நானும் தொடர்ந்து உறுப்பினனாக இருந்திருக்கலாமே என்று சொன்னார். நான், அதனாலேயே நான் அக்-