பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோயாவாம் தீவினையே

121

ஏற்றுக்கொள்வார். அவர் அன்பளிப்பாகத் தந்த மரப் பெட்டியை (பீரோ) காஞ்சியில் இருந்தவரை வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சென்னைக்கு எடுத்துவர இயலாத நிலையில் நண்பருக்குத் தந்து வந்தேன்.

அவர் வயதானவர்; எனவே தாய்நாடு திரும்பிச் சென்றார். பின் அவருக்குப் பதிலாக இளம் தம்பதிகள் அந்தப் பணியினைச் செய்யக் காஞ்சிபுரம் வந்தனர். ‘நியுபிகின்’ என்ற பெயருடைய அவர் வருகை காஞ்சிக் கிறித்தவ உலகுக்குப் புதுத் தொடக்கமாகவே இருந்தது. அந்த ‘நியுபிகின்’ அவர்கள் தாம் இன்று சென்னைச் திருச்சபையின் தலைவராக உள்ளனர். அவர் வந்த போது தமிழ் அறியாதவராக இருந்தார். என்னிடம் தமிழ் பயில வேணடும் என விரும்பினர். வாரத்தில் மூன்று நாட்கள் அவர் என் வீட்டிற்கு வருவார். மொழிபெயர்க்கும் வகையிலும் தமிழ் எழுத்தினைப்பயிலும்வகையிலும் அவர் வாதிடுவர். விரைவில் நன்கு தமிழைக் கற்றுக்கொண்டார். அவர்தம் துணைவியாரும் தமிழ் பயில விரும்பினார்; ஆயினும் விரைந்து கற்றுக்கொள்ள வில்லை, ‘நியுபிகின்’ மெல்லமெல்லத் தமிழ்க் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அவர் உணர்ச்சியும் வேகமும் அவருக்குக் கை கொடுத்து உதவின.

ஒருமுறை அவர் நண்பர் எழுதிய இயேசுவின் வரலாற்றைத் திருத்தித்தருமாறு எனக்குப் பணித்தார். அது பாவால் ஆயது; நடையும் நன்கு அமைந்திருந்தது. அதைக் கண்டு திருத்தித் தந்தேன். அவர் பயிலுவதற்கும் இத்தகைய பணிகளைச் செய்வதற்கும் அவ்வப்போது நான் மறுத்தாலும் கேட்காது ஊதியம் தந்துவிடுவார். நானும் அதனால் எனக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்வேன்.

அவர்களோடு பழகிய காரணத்தால் நானும் அடிக்கடி கிறித்தவக் கோயிலுக்குச் செல்லுதல் வழக்கமாயிற்று. அங்கு