பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோயாவாம் தீவினையே

125


முடிவில் பிள்ளை அவர்கள் உடவில் உள்ள நீங்காத நோய்க்கு அடிகளார் மருந்து தந்தார்கள். அதனால் முற்றும் குணமடைந்த பிள்ளை அவர்கள் தாம் வாழ்ந்த நாள்வரை ஒவ்வொரு ஆண்டும் தவறாது மடத்துக் குரு பூசைக்குவந்து தம் கடமையாகிய சொற்பொழிவை ஆற்றிச் சென்றனார். ஒரு காலத்தில் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்க இவர் பேச இருவரும் ஒருவரை ஒருவர் இராமாயணப் பாடல்கள் வழியே ஏத்தியும் தாழ்த்தியும் இரட்டுற மொழிந்தும் பேசிய பேச்சுக்கள் மக்கள் மனதை மகிழ்வித்தன. இவ்வாறே ஏகாம்பரநாதர் விழாவில் பன்னிரெண்டு நல்ல பல அறிஞர்கள் பேச்சுக்கள் நடைபெறும். நான் அவைகளிலெல்லாம் கலந்துகொண்டு பேசியும் பெரியவர்கள் பேசக் கேட்டும் நிரம்பப் பயன்பெற்றேன். சமய உண்மையை ஓரளவு உணர என் காஞ்சி வாழ்க்கை எனக்குத் துணையாயது.

அறிஞர் கா. சுப்பிரமணிப் பிள்ளை அவர்களை நாடு அறியும். அவர்தம் புலமையை உலகு அறியும். இருந்தும் கடைசிக் காலத்தில் அவர் வாழ்க்கை செம்மையாக அமைய வில்லை. அவரை ஆதரிப்பார் அற்ற நிலையில் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார், என் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது நான் அவரிடம் பல பாடங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். ஆயினும் அவரால் முழுப் பயன் பெற்றவர் திரு.வச்சிரவேலு முதலியார் அவர்களாவர். எப்படியோ அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவரிடம் சமய நூல்கள் - சாத்திர நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டார். இன்று அவர்கள் சமய சாத்திர விற்பனராக இருப்பதற்கு அதுவே அடிப்படைக் காரணம் என்றால் மிகையாகாது.

ஒரு முறை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள் காஞ்சிபுரம் வந்து தங்கி, பல நாட்கள் சமய, சாத்திரச் சொற்பொழிவுகள் செய்தனர். அவர்தம் ஆழ்ந்த