பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

காஞ்சி வாழ்க்கை


 னேன். கேடிலியப்பருக்குக் கிடைத்த அதே வெண்காட்டுப் பதிகம் எனக்கும் கிடைத்தது. அப்பதிகம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அப்பாடல் எல்லாரும் அறிந்த ஒன்றே. என்றாலும் எழுதுகிறேன்.

'பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினேடு உள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குலநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’

என்ற பாடலே அது. வெண்ணெய் நல்லூர்க் கேடிலியப்பப் பிள்ளைக்கு மகப்பேறு இன்மையின் தேவாரத்தில் கயிறு சார்த்தி இப்பாடலைப் பெற்றனர் என்றும் உடனே திருவெண்காடு சென்று முக்குள நீரில் மூழ்கி, வெண்காடு விகிர்தனை வழிபட்டனர் என்றும் அதன் காரணத்தாலேயே மெய் கண்டார் தோன்றினார் என்றும் அவரது சிவஞானபோதமே சைவசிந்தாந்தத்தின் அடிப்படை என்றும் உலகம் அறியுமல்லவா. ஆம்! அத்தகைய அருட்பாடல் அன்று எனக்குக் கிடைத்தது.

நானும் கேடிலியப்பரைப் பின்பற்றினேன். குடும்பத்தோடு அந்தச் சனவரித் திங்களிலேயே திருவெண்காடு சென்று இறைவனை வழிபட்டேன். சீகாழியில் இறங்கி, அங்கிருந்து மாட்டு வண்டியில் சென்று ஓர் இரவு அங்கே தங்கி இறைவனுக்கு வழிபாடாற்றித் திரும்பினோம். அப்போது திரு. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் (திரு. பக்தவச்சலம் அவர்தம் மைத்துனர்) அங்கே அறக்காப்பாளராக இருந்தனர். அவர்கள் எங்கட்கு வேண்டிய வசதிகளைச் செய்து அளித்தனர். வெண்காட்டு வேந்தையும் அன்னையையும் முக்குள நீர் தோய்ந்தபின் தரிசனம் செய்து வரம் பெற்றுத் திரும்புகையில் புள்ளிருக்குவேளுர், சீகாழி, சிதம்பரம் ஆகிய தலங்களையும் கண்டு கண்டுவந்து சேர்ந்தோம். அதே நிலையில் சந்திராமணி கருவுற்றாள். பத்தாமாதம் ஆண்